Pages

Thursday, December 9, 2010

We Ate Poison

          15 வருடங்களுக்கு முன்னால் Outlook பத்திரிக்கையில் ஒரு அட்டை பட கட்டுரை.    தலைப்பு இதுதான் “ நாம் விஷத்தை உண்கிறோம்” என்று.    அப்பொழுது அதிக ஆங்கில அறிவு இல்லாததனால் அக்கட்டுரையின் முழுக் கருத்தை அறிய முடியவில்லை.

           ஆனால் கருத்து இதுதான் நாம் சாப்பிடும் உணவு அனைத்திலும் நச்சுப்பொருட்கள் உள்ளன என்று.     அப்பத்திரிக்கையின் அட்டைபடத்தையே அழகாக சித்தரித்திருப்பர். காய்கறிகள்,மீன் மற்றும் உணவு வகைகள் அனைத்தையும் மண்டை ஓட்டு வடிவில் அமைத்திருப்பர்.  பார்க்கவே பயமாக இருக்கும்.

இப்பொழுதும் பயம்தான் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலையில்.

ஆனால் இப்பொழுது விவாதிக்க வேண்டியதே வேறு விடயம்.  ஆம்.    எப்படி நாம் உண்ணும் உணவில் விஷம் உள்ளது என்று.    

 நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.

         ஏதேச்சையாக நான் சேர்ந்ததோ இளங்கலை சுற்றுப்புற அறிவியல் பாடத்தில்  போதாதா பின்னே இவ்வுலகில் நிகழும், நிகழ்ந்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புற மாசுபடுதல் என்ன என்ன, எப்படி, எங்கே, யாரால் போன்ற பாடங்கள் பல..

அதில் ஒன்றுதான் Outlook பத்திரிக்கை சுட்டிக்காட்டிய உண்ணும் உணவில் விஷம்.       

நாம் வயல்களில் தெளிக்கும் பூச்சி மருந்துகளில் ஆரம்பிக்கின்றது விஷமம்.
ஆம்.  அப்பூச்சி மருந்துகள் இல்லாமல் நாம் நல்ல அருவடையை பார்க்க முடியாது, விளைச்சல் இருக்காது... அவ்வளவு ஏன் பொதிகை தொலைக்காட்சியிலேயே விளம்பரப்படுத்தப்படுகிறது இன்ன மருந்துகளை இன்ன காலங்களில் தெளிக்க வேண்டும் என்று.

சரி, அப்பூச்சு மருந்துகளை அத்தாவரமும் தன்னுள் எடுத்துக் கொள்கிறது, அவற்றை உண்ணும் கால்நடைகளின் கொழுப்பு 20% அந்த விஷத்தை சேமித்துக்கொள்கிறது, மீதியை அவ்விலங்கின் சிறு நீரகங்கள் வெளியேற்றி விடுகிறது. கால்நடைகள் தரும் பாலிலும் உள்ளது  அந்த பூச்சுக்கொல்லிகள்.

விளைய வைத்த அந்த தானியத்தையோ அல்லது அந்த கால்நடையையோ அல்லது பாலையோ அம்மனிதன் உண்ணும் போது அவ்வளவும் அம்மனிதனுள் இறங்குகிறது   ஆனால் கடவுளின் அற்புதங்களில் ஒன்றான நமது சுத்திகரிப்பு இயந்திரங்களான   சிறுநீரகங்கள் வெளியேற்றி விடுகின்றன,

இப்படி ஏதாவது ஒரு நாள் நிகழ்ந்தால் பரவாயில்லை அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இது இருந்ததென்றால்,   ஆம்.. நாம் அன்றாடம் உண்ணும் அனைத்து உணவிலும் உள்ளது இந்த Pesticides என்ற இந்த பூச்சிக்கொல்லிகள். அதனால் நமது சிறு நீரகங்களும் தொடர்ந்து பாடுபட்டு இதனை வெளியேற்றுகிறது.......ஆனால் ஒருநாள்.............அந்த சிறுநீரகங்களும் நின்று விடும். அவ்வளவுதான்....

மேலே உள்ளது எனக்கு தெரிந்த வகையில் நான் சுட்டிக்காண்பித்துள்ளேன். இதற்கு மேலும் இந்த சங்கிலித்தொடர் மிகப்பெரிதாகவும், பாதிப்புகள் பெரிதாகவும் இருக்கலாம்.


பூச்சிக்கொல்லிகளின் முழு விவரங்களும் அது மனிதன் உடம்பில் ஏற்படுத்தும் முழு பாதிப்புகளும் எனக்கு தெரியவரவில்லை. இதல்லாமல் இன்னும் என்னென வியாதிகளை மனிதனுக்கு ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. குழந்தைகளின் மூளைவளர்ச்சி, நம் உடலின் பாதிப்புகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தலாம்.

அதன் பாதிப்பினால்தான் புதுப்புது  நோய்கள், குறை பிரசவங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்னால் விமரிசையாக விற்கப்படும் குளிர் பானமொன்றில் இந்த பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக(!)(இந்தியாவில்) உள்ளன என்ற சர்ச்சைக் குள்ளானதை நாம் அறியலாம். 

சமீபத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தேனிலும் இக்கலப்பு உள்ளன என்பதை சமீபத்திய ஆய்வுகள் சொல்லியதை நாம் அறியலாம்.

ஆக இதுதான் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இதன் பாதிப்புகள் உள்ளன. என்ன செய்வது. தீர்வு ஒன்றுதான் அதாவது இயற்கை உரங்களை இடவேண்டியதுதான். ஆனால் விளைச்சல்... தெரியாது....ஏற்கனவே விவசாய நிலங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தினால் விளைநிலங்கள் PLOT போட்டு விற்க்கப்பட்டு வருகின்றன, இதில் நாம் இதை சொன்னால்..யார் கேட்பார்கள்.

எனக்கு தெரிந்து 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு கடை எங்கள் நகரத்தில் இயற்கை உரங்களால் தயாரிக்கப்பட்ட அரிசி மற்றும் சில தானியங்களை விற்று வந்தார். எனக்கு மகிழ்ச்சி அளித்தது அதை நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் சிபாரிசு செய்தேன். வெளிநாடு போய்விட்டு தற்போது வந்து பார்த்தால் கடையை காணோம், ஆமாம் யார் வாங்குவார்கள் 5 ரூபாய் விலை கூட சாதாரண அரிசியை விட ..

நாம் இயற்க்கை உரங்கள் இட்டு உண்ணலாம் என்றால் ஆறுகள், குளங்கள் நமது தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவப்பட்ட தொழிற்சாலைகளால் அல்லவா மாசடைகிறது அது கடலில் போய் முடிகிறது, அங்குள்ளதும் பாழாகிவிட்டது.. 

ஆக மனிதன் நிலம், நீர், கடல், காற்று என்று வரிசையாக வீணடித்துவிட்டான். வரும் சந்ததிகளை நினைத்தால் கவலைதான் தோன்றுகிறது. 

என்ன செய்ய என்னாலும் முழு சமுதாயத்தை மாற்றமுடியாதே, சமுதாய ஆர்வலர்கள், சுற்றுபுற ஆர்வலர்கள் கத்தினாலும் மற்ற மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை எங்கள் குரல்கள்., அல்லது நசுக்கப்படுகிறது.

ஏன் தான் சுற்றுப்புறத்தை பற்றி படித்தோம் என்றாகிவிட்டது, சுற்றுப்புறத்தையும் அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சொல்ல ஆரம்பித்தால் எதைச் சொல்ல, எதை விட...அவ்வளவு .

  உலகில் ஏற்படும் அதிக இறப்புகளுக்கு காரணம் அருந்தும் தண்ணீர் சுத்தமில்லாததே என்கிறது ஒரு ஆய்வு.

    எனக்கும் உணவு உண்ணும் முன் நினைவு வரும் என்ன செய்ய நானும் சாப்பிடத்தான் செய்கிறேன்.. ஏனெனில் எனக்கும் தகிக்கிறதே.......பசிக்கிறதே...................

நன்றி : Outlook
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

shanu said...

read your article its quite fearing meanwhile
touching also.hope this will make at least to think and to be conscious about the forthcoming lives.

கோகுல் said...

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_29.html

Post a Comment