Pages

Wednesday, October 20, 2010

Followup - பாபர் ஹூமாயூனுக்கு எழுதிய உயில்



எனது முந்தைய பதிவில் பாபர் ஹூமாயுனுக்கு எழுதிய கடிதம் என்ற தலைப்பில் ஒரு தகவல் எழுதியிருந்தேன் அது நான் மேடைப்பேச்சில் கேட்டதே, அதை நான் உண்மை என்று என்னால் வாதிட முடியாது.

ஆனால் தற்போது ஆனந்தவிகடன் 13/10/10 பதிப்பில் பக்கம் 106ல் பாபர் தன்னுடைய மகனுக்கு எழுதிய உயிலின் வார்த்தைகள் அப்படியே தங்களின் பார்வைக்கு....

’மகனே! நீ உனது மனத்தை, குறுகிய மத உணர்வுகள், தவறான எண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லாப் பிரிவினர்களும் பின்பற்றுகிற மத சம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும், மத வழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்பு கொடுத்து, பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும். நீ மற்ற சமூகத்தினரின் வழிப்பாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச்சேதப்படுத்தக் கூடாது. அடக்குமுறை என்ற வாளைவிட, இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற வாள் மூலம் இஸ்லாமைப் பரப்புவதுதான் அதிக பலன் தரும்’

இப்படி இருக்கும் போது குறிப்பாக அந்த இடத்தில் இந்துக்கள் புனிதமாக கருதும் இடத்தில் கோயில் இருந்திருந்தால் அதை எப்படி பாபர் இடிக்கச் சொல்லி இருப்பார். நிச்சயம் இருக்காது...

நன்றி : ஆனந்த விகடன்.