
நமது நாட்டில் மிகவும் உயர்ந்ததாகவும், மதிப்பிற்குரியதாகவும் நாம் அனைவரும் கருதும் உச்ச நீதி மன்றம் என்பது ஒரு நல்ல எண்ணத்துடன் இன்று வரை நம்மால் பார்க்கப்படுகிறது. இன்னும் அது தான் நம் நாட்டில் நலிந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், ஒரு குழுவினர், ஒரு சமுதாயத்தினர் போன்ற நம் நாட்டில் எங்கு நீதி மறுக்கப்படுகிறதோ அவர்களுக்கு அந்த நீதியை மீட்டடுப்பதில் உச்ச நீதிமன்றம் அதற்குரிய தனித்தன்மையை தக்க வைத்து கொண்டுள்ளது. உதாரணமாக குஜராத் கலவர கேஸ்களை சொல்லலாம்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்தை திசை திருப்பிய, நம் நாட்டு மக்கள் அனைவரையும் புருவத்தை உயர்த்தி பார்க்க வைத்த நிகழ்வுதான் இந்த திருமணதிற்கு முன்னால் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற நீதி பதிகளின் குஷ்பு தாக்கல் செய்த மனுவிற்கான நீதிபதிகளின் கருத்து.
முற்றிலும் இது தவறான கருத்துதான், உச்ச நீதி மன்ற தீர்ப்பு என்று சொல்வதன் மூலம் அது சரியான காரணமாக சொல்ல முடியாது, அந்த நீதிபதிகளும் மனிதர்களே, மேலும் அவர்கள் குறிபிட்டுள்ள தீர்ப்பின் படி இதற்கு சட்டப்படியாக ஆணும் பெண்ணும் தனித்து வசிப்பதில் தடங்கல்கள் இல்லை என்று சொன்னார்கள்.
ஆக சுதந்திர இந்தியாவிற்கு living together என்ற திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் முறை, புதிய வாழ்க்கை முறைதான், நமது இந்தியா இது போல சேர்ந்து வாழ்ந்து அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை, நமது இந்திய நீதி மன்றங்கள் சந்தித்திராததன் காரணத்தால் உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் இப்படிப்பட்ட கருத்திற்கு காரணமாக இருக்கலாம்.
எப்படி நோக்கினும் இது புதிய பிரச்சினை தான், ஏனெனில் ஒருவருக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாடில் நமது இந்திய சமுதாயத்திற்கு ஆணும் பெண்ணும் சந்தித்து பேசினாலே குற்றமாகும் என்று நினைக்கும் இந்த சமுதாயத்தில் living together என்ற கலாசார மாறுபாடு நிச்சயம் ஒரு பெரிய பேரிடிதான்.
ஆனால் மேற்குலகிர்கிற்கு இது ஒன்றும் புதிதல்ல, நமக்கு ஒரு பிரச்சினையில் விடை தெரியாவிடில் மற்ற இடம், மற்ற மாநிலம், மற்ற நாடுகளில் இதற்கு இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம். அந்த வகையில் இக்கலாச்சாரம் மற்ற நாடுகளில் ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளை நாம் பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்.
நம்மை எல்லாம் படைத்த கடவுள் அதாவது நம் மூளையை அதன் செயல் வடிவம் மற்றும் அணைத்து வகையான, இன்னமும் மூளையின் அணைத்து பாகங்களின் முழுமையான செயல்பாடுகளைப்பற்றி மருத்துவ உலகம் கண்டிராத அந்த மூளையை வடிவமைத்து, அது எந்த விசயங்களில் எவ்விதம் அது யோசிக்கும், மேலும் மனிதன் எந்த விஷத்தை கையேலேடுக்க வேண்டும் அது மனிதனுக்கு எவ்விதம் பயன் தரும், அவ்விஷயம் எவ்விதம் மனிதனுக்கு தீங்கு தரும் என்று இறைவன் அறிந்து வைத்திருந்து நமக்கு வழிகாட்டலாக அளித்துள்ளான். அதன் படி வாழ்ந்த மக்கள் நன்றாக வாழ்ந்துள்ளனர், அந்த விதிகளை மீறி அல்லது மனம் போன போக்கில் வாழ்ந்தால் நிச்சயமாக அவ்வித வாழ்க்கை அச்சமுதாயதிர்க்கு தீங்காகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேற்குலகில் இவ்வித வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பெறும் அதன் பக்க விளைவுகள் பற்றி நமது இந்திய சமூகம் அதிகம் அறிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன் . இவ்வித வாழ்க்கை முறை மூலம் மேற்குலகம் பெற்றிருப்பது ஒற்றை பெற்றோர் முறைதான் அதாவது(sings Single Parenting Child).
அதாவது ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணுடன் வாழ்க்கை சலிக்கும் வரை வாழ்ந்து, விரும்பினால் பிள்ளைகள் பெற்று பின்பு வாழ்க்கை சலித்த பின்பு விட்டு விட்டு இருவரும் பிரிந்து விடுவார்கள். இந்த உறவின் மூலம் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையென்றால் பிரச்சினை இல்லை ஏனனில் அவனோ அல்லது அவளோ வேறு ஒருவரைத் வாழ்கைதுனையாகவோ அல்லது மற்றொரு living together partnar யை தேர்ந்தெடுத்துக் கொள்வர்(அதாவது பிரச்சினை முற்றும் வரையில் அல்லது கிழடு தட்டும் வரையில்)
இந்த உறவின் மூலம் அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தாலோ பிரச்சினை வேறு விதாமாக ஆரம்பம் ஆகும். பிள்ளைகளை அதிகபட்சம் பெண்ணே தக்கவைத்து கொள்வாள். அவ்வாறு தன்னுடன் வைத்து கொண்டு வளர்ந்து வரும் பிள்ளைகளே single parenting child ஆகும். அதாவது தந்தை அல்லது தாய் யாராவது ஒருவருடன் மட்டும் வளரும் குழந்தைகள்.
பொதுவாக குடும்பவியல் அமைப்பு, மற்றும் பிள்ளைகள் கூட்டு குடும்பத்தில் வளர்வது என்பது பிள்ளைகள் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பல்வேறு வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்கிறது.
அதாவது தாயிடமிருந்து எப்படி குடும்பத்தை அனுசரித்து நடத்துவது, மற்றவர்களுடன் எப்படி இணங்கி, கட்டுப்பட்டு வாழ்வது இன்னும் வேறுபல நல்ல விசயங்களையும் , தந்தை இடமிருந்து அப்பிள்ளைகள் வாழ்கையின் போராட்டத்தையும், வாழ்க்கை முறைகளையும், வேறு பல நல்ல பழக்கங்களையும், தெரிந்து கொள்ளும், இப்படி இருக்கையில் அந்த ஒற்றை பெற்றோரிடமிருந்து அப்பிள்ளை என்னத்தை கற்றுக்கொள்ளும். அணைத்து விதமான தீய பழக்க வழக்கங்களை தவிர மேலும் தான் தோன்றித்தனம் இவற்றை தான் கற்று கொள்ளும். வேறு ஒன்றும் அல்ல. நடு நிலையோடு நாம் யோசிக்கவேண்டும்.
குடும்ப அமைப்பு என்பது மனித வாழ்கையில் தவிர்க்க முடியாதது. இன்று எத்தனை முதியோர் இல்லங்கள் எத்தனை அநாதை இல்லங்கள், கேட்பாரற்று கிடக்கும் மனம் குலைந்த நபர்கள் எத்தனை எத்தனை பேர் நாம் பார்க்கிறோம் ரோடுகளில். இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் குடும்ப அமைப்பு சீரழிந்தது தான்.
நாம் முடியாதவர்களாக, வயதானவர்களாக படுத்து இருக்கும் போது நாம் பெற்றெடுத்த ஆணோ பெண்ணோ அவர்களை நாம், நம் பிள்ளைகளை ஒழுக்கமாகவும், நல்ல நெறிமுறைகளுடனும் நல் வழியில் வளர்த்து இருந்தோமானால் பிற்காலத்தில் நம்மை நம் குழைந்தைகள் பராமரிப்பார்களா மாட்டார்களா? அது தான் குடும்பம், தந்தையிடமிருந்து மகனுக்கும், தாயிடமிருந்து மகளுக்கும் மற்றும் பாட்டி, தாத்தா இவர்களிடமிருந்து நாமும் நமது குழந்தைகளும் அன்றாடம் கற்றுகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
living together சமுதாயத்தில் வாழ்ந்து single parenting ல் வளர்ந்த குழந்தைகள் எப்படி உங்களுக்கு பாதுகாப்பாய் அமைவார்கள் என்று நீங்கள் உறுதி கொள்ள முடியும்.
நமது குழந்தைகள் நாம் பெற்ற பிள்ளைகள் நம் கண் முன்னாடியே சீரழிவதை நீங்கள் பார்த்துகொண்டு இருப்பீர்களா?
நண்பர்களே கடந்த 2 வருடங்களுக்கு முன்னால் வேகமாக குறைந்து வரும் மக்கள் தொகை என்று தலைப்பிட்டு தினமணியில் ஒரு தலையங்கம் . அதாவது மக்கள் தொகை ஐரோப்பிய நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது என்று சொல்லி இருந்தது அக்கட்டுரை . இது எதன் பாதிப்பால் ஏற்பட்டது? இந்த living together என்ற கலாசார சீர்கேட்டினால்தான்.
living together வாழ்க்கை முறையில் பாதிக்கபடுவது அதிகம் பெண்களே அதாவது குழந்தை பேறு என்பது அவரவர் விருப்பபடியே livingtogether அமைப்பில். எனவே அத்தம்பதி தனக்கு குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்து பிறகு வயது வந்தவுடன் வாழ்க்கை சலிப்பு தட்டி பிரிய நேரிட்டு அப்புறம் வயது, வாழ்க்கை, இளமை எல்லாம் கடந்து வாழ்க்கை முடிந்து ஒன்றுக்கும் உதவாமல் அப்பெண் போய் விடுவாள். பிறகு அப்பெண்ணோ அல்லது ஆணோ யோசித்து என்ன பயன் சொல்லுங்கள்.
அறிவியல் முறைப்படி ஒரு பெண் அதிகபட்சம் அவளுக்கு மாதவிடாய் நின்று போனால் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஆண்களால் 70 வயதிலும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும், living together வாழ்கையில் அந்த ஆண் சலிப்பு தட்டியவுடன் பிரிந்து சென்று விட்டு பெண்ணை நிற்கதியில் விட்டு விட்டு போய் விடுவான். பிறகு அந்த பெண்ணை அரவணைக்க அவரது பெற்றோர்கள் இருப்பார்கள் என்பதோ அல்லது சகோதர சகோதரியோ தன்னை அரவணைபார்கள் என்று சொல்ல முடியுமா(அந்த சகோதர சகோதரியோ அவர்களும் living together வாழ்கையில் இல்லாதிருக்க வேண்டும், இருந்தால் எப்படி புதிதாக ஒருவரை அரவணைப்பார்கள் ) ஆனால் அந்த ஆண் வேறு ஒரு வாழ்க்கை தேர்ந்து எடுத்துக்கொள்வான்.
இ ப்படி இதை நாம் ஆதரித்தால் நாம் நிச்சயம் ஆணாதிக்கமிக்கவர்களாகவே நாம் நடந்து கொள்கிறோம். நாம் பெற்ற பெண் பிள்ளைக்கு இந்த நிலைமை வந்தால் நாம் ஒத்துக்கொள்வோமா? நடு நிலையுடன் சிந்தியுங்கள்.
இதற்கு உதாரணமாக இக்கருத்தை ஆதரிப்பவர்கள் எடுத்துக்காட்டாக சுட்டிக்கான்பிப்பது கமல்ஹாசன் என்ற நடிகரை, அவர் முன்பு சரிகாவுடன் வாழ்ந்து இப்பொழுது பிரிந்து வாழ்க்கை நடத்துகிறார். பிரிந்து போன சரிகா பணம் படைத்தவராக இருந்தால் பரவாயில்லை ஆனால் அவரோ பிழைப்பிற்காக ஒரு படத்தில் அரை குறை ஆடையுடன் ஒரு பாட்டிற்கு வந்து சென்றார் என்று கேள்விபடுகின்றோம், ஆனால் பாதிக்கப்பட்ட(பெண்)வர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவரின் எதிர்காலம் என்ன? நீதிபதிகளும் , இவ்வாழ்க்கை முறையை ஆதரிப்பவர்களும் தான் பதில் சொல்லவேண்டும்.
இதை இவ்வள்வு முக்கியதுவம் கொடுத்து பார்க்கவேண்டுமா என நீங்கள் கேட்கலாம் சில வார இதழ்களில் இது பற்றிய கட்டுரைகள் வந்த பிறகுதான் நான் இதை பற்றி எழுத தோணியது.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
10 comments:
மேலை நாடுகளில் பிள்ளைகளெல்லாம் நடு ரோட்டிலா நிற்கிறார்கள். இங்கே 99% சதவீதம் முன்னாள் மனைவி/கணவன் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகவே வளர்க்கின்றனர். இவை மனம் சார்ந்தது.
ஆனால் அவரோ பிழைப்பிற்காக ஒரு படத்தில் அரை குறை ஆடையுடன் ஒரு பாட்டிற்கு வந்து சென்றார்//
அவர் விருப்பம் அவர் ஆடுகிறார், நாம் எப்படி தலையிட முடியும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்தை திசை திருப்பிய, நம் நாட்டு மக்கள் அனைவரையும் புருவத்தை உயர்த்தி பார்க்க வைத்த நிகழ்வுதான் இந்த திருமணதிற்கு முன்னால் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற நீதி பதிகளின் குஷ்பு தாக்கல் செய்த மனுவிற்கான நீதிபதிகளின் கருத்து.
முற்றிலும் இது தவறான கருத்துதான்//
எப்படி ஏன் தவறு? தனி மனித ஒழுங்கு சட்டங்களை நம் குடும்பம் தாண்டி திணிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
//மேலை நாடுகளில் பிள்ளைகளெல்லாம் நடு ரோட்டிலா நிற்கிறார்கள். இங்கே 99% சதவீதம் முன்னாள் மனைவி/கணவன் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகவே வளர்க்கின்றனர். இவை மனம் சார்ந்தது//
சார்,
மேலை நாடுகளில் பிள்ளைகள் நடுரோட்டில் இல்லைதான், அவர்களின் தீய நடவடிக்கைகளை நமது பிள்ளைகல் பின்பற்ற அனுமதிப்பீர்களா? நீங்கள் சொன்னா அதே மனம் சம்மந்தப்பட்டதுதான் நான் சொல்ல வந்ததும்.
//அவர் விருப்பம் அவர் ஆடுகிறார், நாம் எப்படி தலையிட முடியும்//
சார்,
அவர் விருப்பம் என்றால் அவர் கமலஹாசனோடு சேர்ந்து வாழும் போது ஆட வேண்டியதுதானே? கமல் நிராகரித்த பின்பு தானே இந்த நிலைக்கு வந்தார். நான் சொல்ல வந்தது ஒரு பெண் எப்படி பாதிப்புள்ளாகிரார் என்பதைதான்.
//எப்படி ஏன் தவறு? தனி மனித ஒழுங்கு சட்டங்களை நம் குடும்பம் தாண்டி திணிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? //
தனி மனித ஒழுக்கங்கள் ஒரு குடும்பத்தையும், பாதிக்கும், அப்படி பாதிக்கும் போது, தனி மனித சீர்கேடுகள் தலை தூக்கும்போது நமது நாட்டு நீதிமன்றங்கள் அதை கட்டுப்படுத்தவேண்டும்.
அவங்க அவங்க தனி உரிமை .. தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள் . யார் எப்படி வேண்டும் ஆனாலும் வாழட்டும் . அவர்கள் மனது , அவர்கள் விருப்பம் . நாம் நாம் ஒழுங்காக இருக்க வேண்டியது தானே . அடுத்தவர்கள் உரிமைக்குள் தலையிடுவது . அடுத்தவர்கள் பற்றி பேசுவதே வேலையாகி விட்டது . மனிதனை மதங்கள் அடிமைப்படுத்துகிறது என்றால் .. நாம் மனிதர்களும் எதற்கு மனித விருப்பங்களை அடிமைப்படுத்த வேண்டும் .
நல்லா சொல்லி இருக்கீங்க இதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை கருத்து மட்டும் சொல்லி இருக்கிறது
ஆண்களால் 70 வயதிலும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும், living together வாழ்கையில் அந்த ஆண் சலிப்பு தட்டியவுடன் பிரிந்து சென்று விட்டு பெண்ணை நிற்கதியில் விட்டு விட்டு போய் விடுவான்.//
திருமணம் செய்யும் ஆணுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையா?..
லிவிங்-டுகெதரின் மிக தவறான புரிதல் இது..
நான் விரிவாக எழுதுவதாயிருக்கிறேன்..
எதிர்க்கும் அனைவரின் அச்சமும் ஒன்றாயிருக்கிறது.. தவறில்லை.. புரிதலில்தான் தவறு..
ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க மக்கா.....நல்ல இருக்கு
Arumayaana pathivu. Nanri!
Post a Comment