சென்ற பகுதியில் (சென்ற பகுதியை படிக்க) விவாதித்த இன்றைய இளைஞர்களுக்கு உலகாதாயக்கல்விதான் போதிக்கப்படுகிறது இந்நிலை நம்நாட்டிற்க்கு ஆபத்து இது போன்ற கல்விக் கொள்கை மனித தரத்தை சீழ் படுத்துமே அன்றி மேம்படுத்தாது என்று சொல்லி இருந்தோம் .
நாம் சொல்ல வருவது என்னவெனில் தற்போதுள்ள பாடத்திட்டங்களில் வாழ்க்கைக் கல்வி போதிக்கப்படுவதில்லை உலகில் அம்மனிதன் வேலையோ அல்லது தொழில் தொடங்கவதற்க்கான கல்வி மட்டுமே போதிக்கப்படுகிறது, ஏனெனில் நண்பர் ஒருவர் சொன்னதுபோல கல்விக்கூடங்களும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே இயங்குகிறது, பாடத்திட்டங்களும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே தயாரிக்கப்படுகிறது அதில் உருவாகி வரும் ஆசிரியர் என்ன போதித்து விடப்போகிறார், பின் வரும் சந்ததிகளின் நிலையும்.............அதேதான்..........
உதாரணத்திற்கு இந்த மாதத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் மாநிலம் தழுவிய பொதுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது அதில் அங்கம் வகிக்கும் ஷங்கர் ராம சுப்பிரமணியத்திடம் சன் டே இந்தியன் இதழ் அவரிடம் பேட்டி காண்கின்றது அப்பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி இது தான் :- இன்றைய கல்வி முறையில் சுதந்திரமான சிந்தனையும் சமூக உணர்வும் உள்ள ஒரு குடிமகன் உருவாகும் சூழல் உள்ளதா?
பதில்: பகுத்தரிவுப்பூர்வமான, பல் திறன்களை வளர்க்கும் கல்விமுறை இப்போது இல்லை. இப்போதுள்ள பாடத்திட்டங்கள் மாணவர்களால் உருப்போடப்படுகிறது, அதை அப்படியே எழுதுங்கள், வேலைக்குப்போய் நன்கு சம்பாதியுங்கள் என்ற மனப்போக்கில்தான் கல்வு அமைப்பு இருக்கிறது

அவர் சொன்ன பதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது இந்தியாவின் கல்விக் கொள்கை எப்படி உள்ளது என்று, குழந்தைகளை பரிட்சைக்குத் தயார்ப் படுத்தவே ஆசிரியர்களும், பாடங்களும் அமைந்துள்ளனவேயன்றி அக்குழந்தைகளின் நல் வாழ்வுக்கு அவர்களின் நல்ல மன நிலைக்கு உதவவில்லை.

மனிதன் படித்த படிப்பு அம்மனிதனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வில்லை அதனால் அம்மனிதன் பாரிய, மீளா முடியாத துயரமான முடிவெடுத்து விடுகிறான். எவ்வளவு பெரிய இழப்பு. பெரும் படிப்பு படித்தவர்களின் இந்த முடிவினால் நாம் ஸ்தம்பித்துப் போகிறோம்.
இன்றுள்ள உலகில் உள்ள இளைஞர்களால் தன்னை பெற்றெடுத்த பெற்றோர்களை பேணிப் பாது முடிகிறதா? நம் எல்லோருக்கும் தெரிந்துதிருக்கும், சமீபத்திய ஆய்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள் இந்தியாவில் பெற்றவர்களை நிர்கதிகளாக்கும் நிலைமை தற்போது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதில் அதிகமான பாதிப்பிற்குள்ளானவர்கள் இருப்பது சென்னையில் தான், விருந்தோம்பலை ஓங்கிப்பிடிக்கும் தமிழகத்திற்க்குத்தான் இந்த நிலைமை, இது யாரால்,

அப்பிள்ளை படித்து மேல்நாட்டில் உடனே வேலை கிடைத்து, விசா கொடுத்து அழைத்துக் கொள்ளும் அளவுக்கு மிக உயர்ந்த படிப்பு படித்த பிள்ளைக்கு தெரிய வில்லை தான் அனுப்பும் பணம் அல்ல தன் பெற்றோர்கள் எதிர்ப் பார்த்தது என்று, அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பும், தள்ளாத வயதில் தனக்கு ஆதரவும் தான் அப்பெற்றோர்களுக்கு தேவையானவை என்று. அப்படிப்பு ஏன் சொல்லித்தர வில்லை அவ் வுண்மையை அவர்களுக்கு.

இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment