நமது மண் கெட்டு விடக்கூடாது, இராசாயண விவசாயம் ஆபத்தானது, இயற்கை விவசாயம் நன்மை பயக்க வல்லது, மக்கள் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என்று யார் பிராயசப்படுவார்கள் இந்த உலகைப் பற்றிய கவலை, மக்களைப் பற்றிய கவலை உள்ளவர்கள்தான்.
ஆனால் சமீபத்தில் இந்தியா வந்து சென்ற ஒபாமாவிடம் நாடும் நாட்டு மக்களும் வளர்ச்சியடைந்து விட்டார்கள் என்று ஏன் அவரிடம் காட்டவேண்டிய அவசியம் வந்ததென்று தெரியவில்லை.
உலகில் மிக அதிகமாக காற்று மண்டலத்தை மாசுப்படுத்துவதில் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கா, மாசு படுத்துதலை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இன்றுவரை கையெழுத்து போட மறுத்து வருகிறது அமெரிக்கா.
சமீபத்தில் தென் அமெரிக்காவில் நடைபெற்ற அகில உலக கூட்டத்தில் கூட எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் முடிந்திருக்கிறது அக்கூட்டம்.
இதெல்லாம் இப்படி இருக்க ஒபாமாவுக்கு காட்டுவதற்க்காக இந்தியாவின் மையத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது ஒரு கூத்து.
சமீபத்தில் பசுமை விகடன் 10/12/10ல் பக்கம் 16ல் வெளிவந்த கட்டுரைதான் மேலே உள்ள தலைப்பு.
கான்புறா..................அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்காக வீடியோ கான்ஃபரஸிங்கில் பேச வேண்டி தயாரிக்கப் பட்ட ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்.
அமெரிக்க அதிபர் ஒபாமா வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலமாக இந்த கிராமத்தில் உள்ளவர்களுடன் உரையாடியதால் உலகப்புகழ் பெற்றுவிட்டது இவ்வூர்.
நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இண்டெர்நெட் வசதி செய்து கொடுக்க திட்டம் வகுத்துள்ளது மத்திய அரசு அதை ஒபாமாவிடம் காட்ட இந்த கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இண்டெர்நெட் வசதி செய்து கொடுக்க திட்டம் வகுத்துள்ளது மத்திய அரசு அதை ஒபாமாவிடம் காட்ட இந்த கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதற்காக காண சென்றனர் குழுவினர்.
அவர்களுடன் அவ்வூர் வாசிகள் பேசியுள்ளனர் உண்மைகளை.
ஊரோ காய்ந்து, ஏரிகளோ வரண்டு போயுள்ள ஒரு கிராமம்.
பஞ்சாயத்து செயலாளர், ஒரு நர்ஸ், ஒரு M.B.A. மாணவர் என மூவர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேசிய அன்று பகலில் மின்சாரம் இருந்தது ஆச்சர்யம்!!
ஊரின் விவசாயம் செழிப்பதற்கு எந்த வழியும் இல்லை, கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் இல்லை.
ஊரின் சுகாதர நிலையத்தில் உள்ள ஆண் நர்ஸ் சந்தர்லால் 7000 பேர் இருந்தும் ஒரு மருத்துவர் இல்லை, நான் தான் நோயாளிகளுக்கு முடிந்த வரை சிகிச்சை அளிக்கின்றேன், அவசரம் என்றால் 10 கி.மீ செல்ல வேண்டும் மருத்துவரைப் பார்க்க. என்கிறார்.
உண்மை இப்படி இருக்க டெலிமெடிசன் உதவியால் சிகிச்சை அளிக்கப்படுவதாக ஒபாமாவிடம் பேசிய நர்ஸ் தெரிவித்துள்ளார்.
நேரில் போய் சொன்னாலே தண்ணீர் கைப்பம்புகளை ரிப்பேர் பார்க்க ஆட்கள் வருவதில்லை ஆனால் ஊர் பஞ்சாயத்து செயலரோ இ-மெயிலில் புகார் அனுப்பிய உடனே புகார்கள் சரி பார்க்கப் படுவதாக சொல்லியுள்ளார் ஒபாமாவிடம்.
இது எப்படியிருக்கு...
ஏன் இப்படி நாடகமாட வேண்டும் என்று தெரியவில்லை, இந்தியாவின் இதயப்பகுதியில் உள்ள இக்கிராமத்தினர் சொல்கின்றனர் ஒபாமா பேசிய அன்றுதான் நாங்கள் வாக்களித்த மந்திரியை பார்க்க முடிந்தது என்று .
சரி, இப்படியெல்லாம் செய்து காண்பித்ததால் என்ன கிடைத்து விடப் போகிறது இந்தியாவிற்கு? ஆனால் வந்தவரோ 20,000 வேலை வாய்ப்புகளை வாங்கிச் சென்றிருக்கிறார் அவரது நாட்டிற்க்கு.
இந்தியா வேளாண்மை விவசாயத்தில் சிறந்து விளங்குகின்றது என்பதை பறை சாற்றவா? இந்திய அரசியல்வாதிகள் வேளாண் நிலங்களை பண்ணாட்டு கம்பெனிகளுக்கு பங்கு வைப்பதைப் பற்றி தனி புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.
ஆக இந்தியாவை சுரண்டி சுரண்டி சுடுகாடு ஆக்கிவிடுங்கள்.
நன்றி : பசுமை விகடன் மற்றும் குழுவினர்

இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment