Pages

Monday, November 29, 2010

இன்றைய இளைஞர்களும், உலகாதாயக்கல்வியும்





       ண்பர் ஒருவர் ரொம்பவும் விமரிசையாகக் கருதப்படும் பொது தளமான Facebookல் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்தார். அதாவது ” எங்களுக்கு பாடத்திலும் சொல்ல வில்லை செய்முறையிலும் சொல்ல வில்லை சமுதாயத்தைப் பற்றி, நாங்கள் எதற்கு கவலை பட வேண்டும் நாங்கள் நன்றாக சம்பாதிப்போம் facebook போல பொதுதளத்தில் அரட்டை அடிப்போம், பதில் எழுதுவோம்,  அதாவது சமுதாயத்தை பற்றி எதுவும் சிந்திக்க தெரியாது எங்களுக்கு அது பற்றிய கவலையும் இல்லை என்ற தொனியில் கருத்து சொல்லியிருந்தார்.


இன்றைய சாதாரண இளைஞர்களின் நிலைமை இதுதான்

பிள்ளை பெற்று அதை ஆங்கிலேய பள்ளியில் சேர்த்து பின்பு சில வருடங்கள் கழித்து “என் பிள்ளை சரளமாக ஆங்கிலம் பேசுகிறான் பார்” என்றும் பிறகு அப்பிள்ளையை படாத பாடுபட்டு இப்பொழுது எந்த படிப்பு  அதிக லாபகரமானதோ அதை படிக்க வைத்து விடுகிறோம்,

நாம் பெற்ற பிள்ளைகள் நன்கு சிறந்து விள்ங்கவேண்டும் என்று எண்ணுவது தவறன்று எந்த பெற்றோரும் தன் பிள்ளைகள் சிறந்து விளங்கத்தான் ஆசைப்படுவோம்.

படித்து வெளியில் வந்த அவன் உடனே கைநிறைய சம்பாதிக்க வேண்டும் மற்றும் “என் பிள்ளை States ல இருக்கான், Swiss ல இருக்கான் என்று நாம் பெருமையாக பேச வேண்டியும் நாம் அப்பிள்ளையை, படிப்பு உண்டு அவன் உண்டு என்று நாம் மிகவும் கண்டிப்புடன், அவனது குறிக்கோளை அவனிடம் விதைத்து, வளர்க்கிறோம்.


அதனால் அவன் சமுதாய அக்கறையோ அது பற்றிய பார்வையோ அல்லது சுற்றுபுறத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வளருகின்றான் அல்லது அது பற்றி தெரிந்துக்கொள்வதற்க்கோ வாய்ப்பில்லாமல் வளரலாம்.

இந்நிலைக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் படிக்கும் படிப்பு., அவர்கள் படிக்கும் படிப்பு அவர்களுக்கு உதவாதேதே. அவர்களுக்கு உலகாதாயத்திற்க்குண்டான அதாவது Materialistic அல்லது பண ஆதாயத்திற்க்குண்டான படிப்பு மட்டுமே அவர்களுக்கு போதிக்கப்படுகிறது நம் இந்தியாவில் அல்லது உலகில்.

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது - இது சரிதான்.

எப்படி முன்னேறுவது, எப்படி மேலே வருவது, எப்படி பெரும் பணம் ஈட்டுவது என்பதிலேயே குறியாக உள்ள இப்படிப்பு அவர்களின் வாழ்க்கை என்று வரும்போது அம்மனிதன் திணருகிறான், திண்டாடுகின்றான்.ஏனெனில் சமுதாயத்தில் அவன் எப்படி வாழ வேண்டும், எப்படி மனதை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதில் சரியாக கற்றுத்தேறாத ஒருவன், ஒரு பிரச்சினை என்று வரும்போது அம் மனிதன் முடிவெடுக்க திண்டாடுகிறான் அல்லது தவறான முடிவெடுத்து விடுகிறான்.

இன்றைய உலகாதயக்கல்வி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நாம் அறியாததல்ல உதாரணத்திற்கு சிலவற்றை சொல்லலாம் சமீபத்திய நம் நாட்டின் நிகழ்வுகளை,

வெளிநாட்டில் மேற் படிப்பு படித்த இரு இளைஞர்கள் பணத்திற்க்காக வேண்டி ஒரு குழ்ந்தையை கடத்துகின்றனர்.

படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய வாத்தியார்களே தன் வகுப்பில் படிக்கும் பெண்குழந்தைகளுடன் நடந்துக்கொண்ட சம்பவங்கள் நாம் அறியாததல்ல

காவல்துறையின் உயர் மட்ட அதிகாரிகளே பண்ணிய தப்புக்கள், RAW என்ற உளவுத்துறையில் தன் கீழ் பணியாற்றிய பெண்ணிடம் மேல் அதிகாரி நடந்துக்கொண்ட சம்பவங்கள்,

1000 கோடி வைத்துருக்கும் நபர் அல்லது ஒரு அரசியல்வாதி மேலும் மேலும் கோடிகளை அல்லது  லட்சம் கோடிகளை சுருட்டுவதும்

ஒன்றல்ல இரண்டல்ல சொல்வதாக இருந்தால் பக்கம் பக்கமாக சொல்லலாம்.

இங்கே இப்படியென்றால் வெளிநாடுகளில் நன்கு வளர்ந்த நாடுகளில் வேறுமாதிரி உள்ளது நிலைமை . எடுத்துக்காட்டாக நேரத்தை மிச்சப்படுத்தி அதை உழைப்பில் ஈடுபடுத்தி முன்னேறிய ஜப்பானில் நிகழும் தற்கொலைகள். உலகிலேயே அதிகம் தற்கொலைகள் ஜப்பானில் நிகழ்வதாக சொல்லப்படுகிறது, நம் இந்தியாவில் அதிகம் தற்கொலைகள் அதிகம் படித்த மக்கள் உள்ள கேரள மாநிலத்தில் நிகழ்வதாக சொல்கிறது ஒரு ஆய்வு. ஆக எங்கும் படித்தும் அறியாமை என்னும் இருள்.

படித்தென்ன பயன்? அவர்கள் படித்த படிப்பு என்ன சொல்லிற்று, அவர்கள் மனதை அது பக்குவபடுத்த வில்லை. அதனால் தான் சமுதாயத்தில் உயர்ந்த படிப்பு படித்து உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களே மிகப் பெரிய தவறுகளை செய்கின்றார்கள்.

பிரச்சினை இதனால்தான் உலகாதயக்கல்வி, படி படி என்று படித்தும், மிக உயர்ந்த இடத்திற்காக வேண்டி உழைத்தும் அந்த இடத்தை அடைந்த பிறகு அப்படிப்பு அம்மனிதனது வாழ்விற்க்கு உதவவில்லை, அன்றாட வாழ்வில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுக்குண்டான தீர்வை அக்கல்வி அம்மனிதனுக்கு வழங்காத காரணத்தினால் அவன் சில விடயங்களில் தவறான முடிவுக்கோ, அல்லது தனது மனோ இச்சைக்கோ வீழ்ந்துவிடுகின்றான், தவறு செய்கிறான்.

பின்பு எங்கே அவன் சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பது? மற்ற விஷயங்களில் அவன் கவனம் கொண்டு பார்ப்பது? இவ்வகையான படிப்பு மனித வாழ்வுக்கு பயன்படாது, இவ்வகையான படிப்பு எந்த வித ஊழலையும் தடுத்து நிறுத்தாது மேலும் அது மகா கடுமையான ஊழலுக்கு அம்மனிதனை தூண்டுமே தவிர நிச்சயமாக அடித்துச் சொல்லலாம் இவ்வகையான கல்வி ஊழலை தடுத்து நிறுத்தவே நிறுத்தாது.

நாம்தான் தினமும் பார்த்துக்கொண்டுள்ளோமே தினசரிகளில், செய்திகளில். இப்போழுது சூடான செய்திகளான 2G ஊழல்கள், விளையாட்டு ஊழல்கள், வீடுகள் கட்டித்தருவதாக போலிச் சான்றுகளுடன் வங்கி அதிகாரிகளே உடன்பட்டு செய்த லட்சம் கோடி ஊழல்கள்,

மேலே சொன்ன அனைவரும் படிக்காத முட்டாள்களா? ஒன்றும் அறியாதவர்களா? அனைவரும் நன்கு படித்த உயர்பதவிகளில் உள்ளவர்கள், ஏன் அவர்கள் படித்த படிப்பு அவர்களை ஒழுங்குபடுத்தவில்லை? வாழ்க்கை நெறியை போதிக்க வில்லை? ஏனெனில் காரணம் அறிந்ததுதான்.

உலகாதாயக்கல்வியில் பணம் பணம் என்று பணம் பன்னத்தான் தெரியுமே தவிர மனதைத் தொடாது, அவர்களை அவர்களின் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டிதராது.

இந்நிலை நம் நாட்டிற்க்குத்தான் ஆபத்துதான், இப்படி பட்டவர்களை வைத்துக் கொண்டு எங்கே இந்தியா வல்லரசாவது? எதை எடுத்தாலும் ஊழல் புதிது புதிதாக ஊழல்.

நன்றாக சிந்தித்துப்பாருங்கள் இராணுவத்திலிருந்து கீழ் நிலையில் உள்ள ஊராட்சி துப்புரவாளர் வரையில் அனைத்து துறையினரும் ஏதாவது ஒரு விதத்தில் ஊழலிலோ அல்லது குற்றத்திலோ சம்பந்தப்பட்டுருப்பர்(அதாவது அவர்கள் பணியில் மிக நேர்த்தியோடு இருந்தார்களா? யாரும் தன்னை பார்கவில்லை என்றாலும் தனது கடமையை செய்தார்களா?) இப்பொழுது சிந்திக்கவேண்டும் இவர்களையோ அல்லது இது போன்ற கல்வித்திட்டத்தில் வளரும் குழந்தைகளை வைத்துக்கொண்டா நாம் இந்தியாவை வரலாறு படைக்க வைக்கபோகிறோம்? வாய்ப்பே இல்லை.

இரண்டாம் பகுதியை படிக்க பகுதி 2
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

பத்மா சுவாமிநாதன் said...

நண்பருக்கு ஒரு யோசனை...
கல்வித்துறை மாணவர் மத்தியில் உருவாக்க தவறிய "சமூக அக்கறை,
பொது அறிவு, இன்றைய அரசியல்" போன்ற விஷயங்களை இளைஞர்கள்
தாங்களாக கற்றுக்கொள்ள முன்வர வேண்டும்...
அடுத்த தலைமுறைக்கு பெற்றோராவது இதுபோன்ற விஷயங்களை
எடுத்து சொல்லவேண்டும்...
என்பது என் கருத்து...

இனா அனா அன்வர்தம்பி said...

நிதர்சனமான உண்மை உங்கள் பதிவு சகோதரரே.......
அதற்காக தான் முன்னோர்கள் அனுபவ அறிவை இளைய தலைமுறையினருக்கு போதித்தனர்.
அவர்களின் பார்வை தொலைநோக்காக தான் இருந்ததே தவிர குறுகிய வட்டத்தில் இருந்தது இல்லை.
படிப்பில் உண்மையான வரலாறுகள் மற்றும் சமூக சிந்தனைகள் இடம் பெரும் வரை மனிதனுக்கு ஒருபோதும் படிப்பு அறிவு பயன் தராது
இப்போதுள்ள மாணவர்களுக்கு பெரும் பணக்கார முதலாளிகள் தான் முன்மாதிரியாக இருக்கிறாகளே தவிர சமூக சிந்தனையுடன் வாழ்ந்த எந்த மாமனிதர்களையும் முன்மாதிரியாக பார்க்க முடியவில்லை. காரணம் சமூக சிந்தனையுடன் வாழ்ந்த எந்த மாமனிதர்களின் வரலாறையும் இன்றைய ஏட்டுச்சுரைக்காய் போன்ற படிப்பு சொல்லிதரவில்லை. அதனால் அது கறிக்கும் உதவவில்லை.

Niyas said...

எங்கே , இங்கே கல்லூரிகளே காசுக்காகத்தான் ....
இதில் அவர்கள் எங்கே சமுதாய சிந்தனை தூண்டுவது , போதிப்பது ......
பின் இதை யார்தான் செய்வது ,,,,,
எனக்கு இந்த சிந்தனை இருந்தால் நான் என் பிள்ளைக்கு ..
இச்சிந்தனை இல்லாதவனின் பிள்ளைக்கு ....

அ.மு.அன்வர் சதாத் said...

உங்களின் நண்பர் கூறிய விஷயம் குறித்த உங்களின் குமுறல் நன்று. அதற்க்கு கருத்துரை வழங்கிய உங்களின் நண்பர்களில் ரிஜ்வான் இலந்தை கூறியது
ஒன்று
"படிப்பில் உண்மையான வரலாறுகள் மற்றும் சமூக சிந்தனைகள் இடம் பெரும் வரை மனிதனுக்கு ஒருபோதும் படிப்பு அறிவு பயன் தராது"
இரண்டு
" இப்போதுள்ள மாணவர்களுக்கு பெரும் பணக்கார முதலாளிகள் தான் முன்மாதிரியாக இருக்கிறாகளே தவிர சமூக சிந்தனையுடன் வாழ்ந்த எந்த மாமனிதர்களையும் முன்மாதிரியாக பார்க்க முடியவில்லை"
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்துரை.
நல்ல நண்பர்களையும், சூழலையும் வைத்துள்ள தாங்கள் மேலும் பல விஷயங்களை விவாதிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.

தெம்மாங்குப் பாட்டு....!! said...

it has been written neatly. good.

Post a Comment