Pages

Tuesday, May 25, 2010

குற்றாலதிற்க்கு போகலாம் வாங்க
சுட்டெரிக்கும் வெயில், சாலைகளில் நடக்கவோ,வாகனங்களிலோ செல்ல முடியவில்லை சூடு, எங்கு திரும்பினும் சூடு, போதாகுறைக்கு மின்வெட்டு. இரவிலும் ஓடுகிறது வியற்வை. என்ன செய்ய. இறைவன் அருளால் வந்ததே லைலா. மாற்றிப் போட்டது கால சூழ்நிலையை அதனால் தென் மேற்கு பருவமழை முதலில் தமிழ் நாட்டிலேயே ஆரம்பிக்கப்போகிறது.

கோடையில் மண்டையில் ஏற்ப்பட்ட சூடு தணிய ஏற்ற இடம் குற்றாலம். ஊட்டி, கோடைக்கானல் போன்ற இடங்கள் சூழ்நிலையை குளிராக வைத்துக்கொள்ளும், உடல் சூட்டைத்தணிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இயற்கையான, மூலிகை கலந்த(சில அருவிகளில்)தண்ணீர் எங்கு கிடைக்கும்.ஆக குற்றாலமே சிறந்தது. குளி குளி என்று குளித்துக்கொண்டே இருக்கலாம். சளி பிடிக்காது,ஜுரம் வராது(conditions apply).ஆனந்தம்தான் போங்கள்.

குற்றாலத்திற்கு நம் பஸ் நுழையும் முன்னேயே அவ்வூரின் குளிர் நம்மை வரவேற்கும் , குளிர்ந்த காற்று, காற்றுடன் கூடிய சாரல், ஆஹா தென்காசியை தாண்டியவுடன் நம்மை வரவேற்கும் குற்றாலத்தின் இயற்கை அழகும்,வனப்பும்.

பஸ்ஸை விட்டு இறங்கி வீடு தேடுவது தான் குற்றாலத்தில் நாம் சந்திக்கும் முதல் பிரச்சினை, family ஆக இருந்தால் அதற்க்கு தகுந்தார்போலும், புதிய தம்பதிகள் ஆக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் அமைய வேண்டும் ரூம். எல்லாரும் முன்னிலை படுத்துவது அருவிக்கு பக்கத்தில் தங்கும் இடம் வேண்டும் என்று. அப்படி எதிர் பார்ப்பதால் சீசனில் ரூம் கிடைக்க பெரும் தடுமாற்றம் வரும். போட்டியும் இருக்கும். அதனால் ரூம் சொந்தக்காரர்கள் வாடகையை ஒரே அடியாக உயர்த்தி விடுவார்கள்.

அதனால் குற்றாலத்திற்கு காலையில் போய் இறங்குவது உசிதமல்ல, போனால் மாலையில் போய் இருந்குவது மாதிரி உங்கள் பயணத்தை அமைத்து கொள்ளுங்கள், அப்படி காலையில் போய் இறங்கினாலும் மாலையில் போய் ரூம் தேடுங்கள். நல்ல விலைக்கு கிடைக்கும், குறிப்பாக வாகன வசதி இல்லாதவர்கள் அருவிகளுக்கு பக்கத்திலேயே ரூம் அமையும் படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக சிற்றருவி, மெயின் அருவி போன்ற.

காலையில் ஆரம்பித்து சாயங்காலம் வரையிலும் நீங்கள் குளிக்க முடியாது அவ்வளவு கூட்டம் குளிக்கும் அருவிகளில், அதனால் சோம்பல் பார்க்காமல் காலை 4 மணிக்கு எழுந்து குளிக்க முடியுமா என்று முயன்று பாருங்கள். ஆனால் பெண்கள் குளிக்க சரியான சமயம் இரவு 12 மணிக்கு அப்புறமும் காலை 5 மணிக்கு முன்பும், ஆனால் ஆண் துணையுடன்.

பகலில் குளிப்பதால் போலீஸ் அடி வாங்க வேண்டியது வரும்.

பெண்களை புடவையுடன் குளிக்க சொல்லாதீர்கள் பெண்களுக்கு nighty என்ற இரவில் உடுத்தும் ஆடையே சிறந்தது, தாவணியுடன்.

குளிக்க போகும்போது எண்ணெய் தேய்த்துக் கொள்ள, மசாஜ் செய்துக் கொள்ள வேண்டி அங்குள்ள யாரிடமும் சென்றுவிடாதீர்கள், அவர்களில் யார் அனுபவம் உள்ளவர்கள் என்று நம்மால் கணிக்க முடியாது.

அதனால் நீங்களோ அல்லது நண்பர்களோ, குடும்பத்தில் உள்ளவர்களையோ தேய்த்து விட சொல்லுங்கள்.அது போதும்.

இரவில் குளிப்பதே சிற்ந்தது, கூட்டமும் இல்லாமல் இருக்கும்.

மது அருந்தி விட்டு குளிக்க செல்லாதீர்கள் அது மிகவும் ஆபத்து,

குற்றாலத்திற்க்கு சென்றவர்கள் பாபநாசமும் சென்று பார்க்கலாம் அகஸ்தியர் அருவி போன்றவை அருமையாக இருக்கும்.

பழைய குற்றாலத்திற்க்கு செல்ல வேண்டாம் தண்ணீர் அதிக நாட்களில் அதிகமாக வராது.

குடும்பத்துடன் சென்றுகுளிக்க சிறந்த இடம் மற்றும் நேரம் இரவே அதுவும் மெயின் அருவியில் மட்டுமே, மற்ற அருவிகளில் இரவில் குளிக்க செல்ல முடியாது.

Tuesday, May 4, 2010

உங்களை அறியாமல் உங்கள் உடல் இளைக்க

நண்பர்களே, இப்பதிவு நம்மைபோல் ஒரு அறையில் அடைந்துகிடக்கும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் தங்களது உடல் நிலை பற்றி கவலை படாமல் இவ்வுலக ஓட்டத்தில் ஒடும் நம்மை போன்றவர்களின் உடல் நலனை காப்பதற்க்காக எனக்குத் தெரிந்த என்னாலான ஒரு சிறிய அறிவுரையே அல்லது வேண்டுகோளே.

எனது அத்தைமகன் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிரார், அவருக்கு ஒருமுறை இருதய அடைப்பும் வந்துவிட்டது, அதற்கு பிறகும் அவர் தனது நலனில் அக்கரை எடுத்துக் கொள்ளாதது எனக்கு வியப்பை ஏற்ப்படுத்தியது அவரது துணைவியார்தான் அவருக்கு மருந்து கொடுத்து அவர் திட்டினாலும் அவர் இஷ்டத்திற்கு வளைந்து கொடுத்து அவருக்கு உதவி வருகிறார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் வெளிநாட்டில் அவரது வேலை பளு அவ்வாறு அவருக்கு, தனது நலனில் அக்கரை எடுத்துக் கொள்ள அவருக்கு போதிய நேரமின்மைதான், உடற்ப்பயிற்ச்சி செய்ய சோம்பல் வேறு என்னதான் செய்வது. இது நம்போன்றவர்களிடையே இந்த சோம்பல் படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரி விஷயத்திற்க்கு வருவோம், இரு வாரங்களுக்கு முன்னால் வடக்கத்திய நடிகை ஒருவர் ஒரு வார இதழில் உடலை குறைக்க உடற்பயிற்ச்சியோ, காலையில் எழுந்து ஓடவோ, உணவைக் குறைக்கவோ வேண்டியததில்லை BATMITTON என்ற இறகு பந்தாடுங்கள் போதும் என்று சொல்லியிருந்தார்.

அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான் நான் அதை ஆமோதிக்கிறேன், முதலில் நான் ஒரு விளையாட்டு பிரியன் சிறு வயதில் நம் நாட்டிற்க்கே உரிய கிரிக்கெட், பின்பு வாலிபால், பின்பு இறகுபந்து என்று வந்து தற்ப்போது உங்களுக்கு இறகு பந்தையே நான் ஆழமாக சிபாரிசு செய்கிறேன்.


வயது பாரமில்லை

இறகு பந்தில், எந்த வயதினரும் விளையாடலாம், அதே கிரிக்கெட்டோ, வாலிபாலோ 60 வயதிற்கு பிறகு விளையாடுவதென்பது முடியாதது. ஆனால் இறகு பந்தை விளையாடலாம். நீங்கள் இதை சோதிக்க விரும்பினால் உங்கள் ஊரில் உள்ள இறகு பந்து உள்விளையாட்டரங்கில் சென்று பாருங்கள். எனக்கு தெரிந்து எனது ஊரில் என்னுடன் 65 வயது முன்னால் ஆசிரியர் விளையாடுகிறார், அந்தளவுக்கு அவர் ஓடி விளையாட முடியாவிட்டாலும் நன்றாகவே விளையாடுகிறார் என்று சொல்லலாம்.

குறிப்பாக இங்குள்ள அனைத்து உள் விளையாட்டரங்கிலும் அநேகமாக நடுத்தரவயதைத் தாண்டியவர்கள்தான் விளையாடுகிறார்கள்.

பயன்கள்

உள்விளையாட்டங்கம் என்பதால் நீங்கள் ஒரு ஆட்டம் ஆடினாலே வியற்வை கொட்டும், ஒரு 20வயதிலிருந்து நீங்கள் விளையாடுபவர் என்றால் உங்களுக்கு BP, சர்க்கரை, கொழுப்பு, போன்றவை வருவதற்க்கு வாய்ப்பேயில்லை.

இவ்விளையாட்டில் மிக முக்கியமாக சொல்லவேண்டியது நீங்கள் உடற்பயிற்ச்சியோ, ஓடவோ, சாப்பாட்டை குறைத்தாலோ ஒரு கட்டத்திற்க்கு மேல் நீங்கள் சலிப்படைய வாய்ப்புள்ளது ஆனால் இவ்விளையாட்டில் ஆட ஆடுகளத்திற்க்கு இறங்கினால் அடுத்தடுத்த பந்தை திருப்பி அனுப்புவதற்க்கும் உங்களிடம் வந்த பந்தை உடனே எதிர்ப்பக்கம் இடம் பார்த்து அடிப்பதற்க்கும் வினாடிக்கு வினாடி உங்கள் மூளையும் உங்கள் உடம்பும் உங்களை அறியாமல் வேலை செய்து உங்களை அங்கும் இங்கும் ஓட வைக்கும் விளையாட்டு இது.

அதனால் காலையில் விளையாட்டு உங்களை நாள் முழுவதும் நன்றாக இருப்பீர்கள் அல்லது மாலை ஆடினால் நன்றாக தூக்கம் வருவது உறுதி.

வேண்டியவைகள்

இவ்விளையாட்டு கொஞ்சம் காஸ்ட்லியானது, மிரளவேண்டாம் பேட் 1400ரூபாய், அரைக்கால் டிரவுசர் அல்லது முழு டிரவுசர், SAS என்ற ஒரு shoe காலணி உள்ளது அது 575(காலணி அணியாவிட்டால் கால் வலி வருவது உறுதி), விளையாட்டு உள்ளரங்கில் சேர்வதற்க்கு ஊருக்கு தகுந்தார்போல் வாங்குவார்கள் உதா 1200, மாதம் ஒரு 300 அவ்வளவுதான். இதை தற்போது நடுத்தர மக்களும், அதற்க்கு கீழ் உள்ளவர்களும் கொடுக்க முடியும்.(சண்டைக்கு வராதீர்கள், உங்கள் உடல் நலனுக்குத்தான் சொல்கிறேன்)

சாதாரணமாக கடின உழைப்பாளர்கள் எதைப்பற்றியும் கவலை பட வேண்டாம் அவர்களுக்கு அவர்கள் உழைப்பே போதுமானது. உழைக்க வாய்ப்பில்லாதவர்கள். இதை கடைப்பிடிக்கலாம்.

பொது அறிவிப்பு

நீங்கள் ஒரு இருதய நோயாளியாகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, வேறு ஒரு நோய்க்கு வைத்தியம் செய்து கொள்பவர்களாக இருந்தால் உங்களது மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு விளையாட ஆரம்பியுங்கள்.