Pages

Monday, January 3, 2011

ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறதா அவர்களின் தலைவர்களால் - பகுதி 1

ஆம் இப்போதய சூழ்நிலையில் விவாதிக்கப் பட வேண்டிய விஷயம்தான்.

நாடு சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்கு மேலாகிறது, நம் நாட்டில் எத்தனையோ மதங்கள், சாதிகள், சங்கங்கள்.

ஆண்டாண்டு காலமாக அடிமை படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்று தலைவர்கள் போராடினர்.

இத்தனை வருடங்கள் கடந்த பிறகு கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளில் முக்கியமாக தமிழகத்தில் ஜாதியை உயர்த்தி பிடித்த கட்சிகள் தோன்றலாயின, அவர்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடி பெற்றுத் தருவதாக சொல்லி அதன் தலைவர்கள் பெரு வாரியான மக்களை திரட்டினர்.

மக்களும் அவர்களின் மேடைப் பேச்சுகளை நம்பி அவர்களின் பின் சென்றனர்.
அந்த வகையில் எனக்கு கிடைத்த, தெரிந்த , கட்சிகளை பற்றிய எனது கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு:-

காந்தி ஜி யை பற்றிய சர்ச்சை

காந்தி ஜி தேசத் தந்தை,

ஆனால் தலித்களுக்காக தனி இட ஒதுக்கீடும், சில சலுகைகளும் கிடைப்பதற்காக அம்பேத்கர் முன் வைத்த வரைவுத்திட்டத்தை அமல் படுத்தக் கூடாது என்பதில் காந்தி ஜி தீவிரமாக இருந்தார், உண்ணாவிரதமும் இருந்தார், தலைவர்களின் அழுத்ததின் காரணமாக அம்பேத்கர் அதை வாபஸ் பெற்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி

வன்னியரை ஆதாரமாக வைத்து உருவாக்கப் பட்ட கட்சி, ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்தது பின்பு பா.மா.க வாக உருவெடுத்தது, (கேளிக்கைக்காக சொல்வர் :- திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் மரங்களை ரோட்டில் போட்டு அரசியல் செய்தே வளர்ந்தனர் என்று,)

சரி வளர்ந்தாகி விட்டது பிறகு என்ன? பலத்தை காட்ட வேண்டியதுதான்.

பலத்தைக் காட்டியே இத்தனை சீட்கள் என்று பேரம் பேசி சீட்களைப் பெற்று வென்று வந்தனர், இதன் விசுவரூபமாக கடந்த ஆட்சியில் முக்கியத்துறையான இந்திய மருத்துவத் துறை தரப்பட்டது, அன்புமணியும் அவர் பங்கிற்க்கு என்ன செய்தார் என்று விலாவரியாக தெரியவில்லை ஆனால் நடிகர்களை புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லி அதற்கு இந்தி நடிகர் ஷாருக்கான் பதில் சொன்னதால் இந்திய பிரபலம் அடைந்தார்,

கூட்டணி பிரிந்தது, பின்பு பழைய அஸ்திரத்தை எடுத்தார், வன்னியர் மேம்பாடு, சினிமா சீரழிக்கிறது, முழு மது விலக்கு என்று,

ஆனால் ஆட்சியில் உள்ளபோது கிடைத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுக்க ஆஸ்பத்திரிகள் ஒழுங்காக இருக்கின்றனவா? கடை கோடி இந்திய கிராமத்திலும் மருத்துவ வசதி கிடைத்ததா என்றால் இல்லை, வட இந்திய கிராமங்களில் 1000 நபருக்கு ஒரு மருத்துவர்தான்.

சரி அதை விடுங்கள், வன்னியர்கள் மேம்பாடு அடைந்தார்களா என்றால்...... தெரியவில்லை.........அவர்கள் பகுதியிலேயே உள்ள கிராமங்களில் கூட ஏதாவது மாறுதல் நிகழ்ந்ததா என்றால் ம்....கூம்.....இல்லை,

இப்போது எதிரணியில் இல்லை என்றாலும் திரும்பவும் வன்னியர் அஸ்திரத்தை எடுத்துள்ளனர்.

மக்கள் என்ன நினைப்பர், 

விடுதலை சிறுத்தைகள்

மிகப் பெரும் படிப்பு படித்தவர், தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர் ,,,,,,,திருமாவளவன் ஆரம்பித்த கட்சி,

தாழ்த்தப்பட்டவருக்கான விடியல் வெள்ளி, சுழன்றடிக்கும் சூறாவளி என்றார்கள்..

விடுதலை சிறுத்தைகள் .....

ஆகா பெயரே பயமுறுத்துகிறதே,,, என்று பார்த்தால்............ஒன்றும் இல்லை,

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை புலிகள் போல் விடுதலை சிறுத்தைகள்......ஆனால் ....

சரி தமிழ் நாட்டிலும் அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடி ஒரு வெற்றி பெற்றுவிடுவார் என்று பார்த்தால்....... ஒன்றும் இல்லை....

அதே ஜாதி மக்களை உசுப்பேற்றும் பேச்சுக்கள் பேசி, கூட்டத்தை காண்பித்து வாங்கியாகி விட்டது சில பல பதவிகளை, சீட்களை...

இதனால் உண்மையிலேயே விடுதலை அடைந்த்ததா அச்சமூகம் என்றால் .............ஒன்றும் இல்லை,

இவர்கள் இருக்கும் போதேதான் நடந்தது, விழுப்புரத்திற்கு அருகில் மலம் திண்ண வைத்த சம்பவம், இன்று வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் தாழ்த்தப் பட்டவர் நின்று ஜெயிக்க முடியாத சூழல்.

எங்கே போயிற்று விடுதலை சிறுத்தைகள், திருமாவளவன்.......

என்ன ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கும் கூட்டம் கூடும், பின்பு கலைந்து செல்வர், மற்ந்து விடுவர். இதுதான் நடந்து வருகிறது,

ஏனெனில் இவர்கள் சார்ந்திருப்பதோ மாநில பெரிய கட்சிகளை, அவர்களைத் தாண்டி ஒன்றும் பெரிய அறிக்கை விடமுடியாது இவர்களால்.

இதை விடக் கூத்து என்ன தெரியுமா? இவர்கள் தொண்டர்கள் இருக்கும் ஊர்களில் பிளக்ஸ் வைப்பர் எப்படி தெரியுமா?

திருமாவளவனுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் மாதிரி உடை அணிவித்து கையில் துப்பாக்கி கொடுத்து, அருகில் பிரபாகரன் போட்டோவையும் போட்டு ..ஏதோ ஆயுதம் தாங்கி போராடுவர் போல,

இப்படியெல்லாம் வித விதமாக,,,, இதைப் பார்த்தால் நாம் என்ன நினைப்பது ....... காமெடியாக இல்லையா?

இது ஒருபுறமிருக்கட்டும், காவல் நிலையங்களில் என்ன பெயர் இவர்களுக்கு தப்பான முத்திரை குத்தப்பட்டுள்ளது இவர்கள் மேல்,

கூட்டம் சேரும் என்பதெல்லாம் விடுதலைப் பெற்றுவிட்டோம் என்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா?

இதை விடுங்கள் இவர்களின் மாவட்ட பொருப்பில் உள்ளவர்கள் பண்ணும் கட்டப்பஞ்சாயத்துகள், அதன் மூலம் வரும் பிரச்சினைகள் என எவ்வளவோ,

இதுதான் இவர்கள் சொன்ன விடுதலையா?

பிரபாகரன் போல இவரால் ஆக முடியுமா?  அவ்வளவு ஏன் விடுதலைப்புலிகள் மேல் உள்ள தடைகளை நீக்க ஆலோசனைக்கு அரசு கூட்டிய கூட்டத்தில் கூட எத்தனை கட்சிகளின் தலைவர்கள் கூடினார்கள்? வை.கோ வைத்தவிர,

அப்போ வெறும் பேச்சுதான் வெளியே ஒன்றும் செயலில் இல்லை, தமிழன் தமிழன் என்று வெற்றுப்பேச்சுதான்.

ஆக உண்மையில் விடுதலை என்பது என்ன? பல்லின சமூகத்தில் வாழும் மக்களால் ஜாதியை தூக்கி எறிய முடிகிறதா, அவர்கள் மனதை வென்றெடுக்க முடிகிறதா? அதுதான் விடுதலை, அதுவல்லாமல் மழை, வெயில் என்று வந்து அவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதற்காக ஒரு ஆர்பாட்டம், தொலைக்காட்சியில் ஒரு செய்தி அவ்வளவுதான். இது ஒரு மக்கள் விடுதலையா? இதனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் ஓங்கி வளர்ந்து விடுமா?

ஆட்சியில் இருக்கும் கட்சிகளே நாம் போராடவிட்டாலும் அவர்களது ஓட்டு வங்கிக்காக நிவாரணத்தொகை வழங்கி விடும். இதோ... இந்த மழையில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் தயாராகிவிட்டது......

சிந்திக்கிறேன் தொடர்ந்து...........
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:

Post a Comment