Pages

Friday, January 7, 2011

போரட்டக் குழுக்கள் தேர்ந்தெடுத்த அரசியல் பாதை

உலகில் பல்வேறு காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர்களின் போராட்டங்களுக்கு அவர்களால் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது, உரிமைகளுக்காக, இன விடுதலைக்காக, ஒடுக்குவதற்கெதிராக, அநீதிக்கெதிராக என்று பலவாராக......

அவற்றில் முக்கியமானவற்றின் வரலாறுகளை நம்மில் பலர் அறிந்திருப்பர், 

அந்த வகையில் அப்பேர் பட்ட போராட்ட குழுக்களுக்கு பெரிய பேரிடி எதுவரையில் என்றால் செப்டம்பர் 9/11 தாக்குதல் வரையில்தான், அது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இனப்படுகொலை, அத்துமீறல், உரிமை மீறல் போன்ற நியாயத்திற்காக போராடிய குழுக்கள் கூட தர்ம சங்கடத்தில், நெருக்கடியில் சிக்கின.

அமெரிக்கா ஆரம்பித்து வைத்தது தீவிரவாதத்திற்கெதிரான போர், அப்போதைய புஷ் சொன்னார் “நீங்கள் எங்கள் அணியில் இல்லையென்றால் எதிரணியில் இருக்கிறீர்கள்” என்று. அதைத் தொடர்ந்து பட்டியலில் அனைத்து போராட்டக் குழுக்களும் சேர்க்கப்பட்டது இஸ்ரேலிய தீவிரவாத குழுக்களைத் தவிர,  போரட்டக் குழுக்களுக்கு நெருக்கடி ஆரம்பித்தது.

போராட்ட குழுக்களுக்கு நிலவி வந்த பன்னாட்டு மக்களின் ஆதரவும், நியாயமான காரணங்களும் மேற்கத்திய உலகால் நிராகரிப்பட்டன.
                                                                                                 இந்த சமயத்தில்தான் சில மத்திய கிழக்கில் செயல் பட்டுவரும் போராட்ட குழுக்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தன, அதாவது தங்களது ஆயுத மேந்திய போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும் அவைகள் அரசியல் களம் கண்டன. ஜனநாயக வழியில் வேட்பாளர்களை முன்நிறுத்தி மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் மனதை வென்றன. தேர்தலிலும் பெறுவாரியான் வாக்குகள் பெற்று சர்வேதேச சமுதாயத்தை ஆச்சர்யத்திற்குள்ளாக்கின.

இதுதான் முக்கியம், சர்வதேச சமுதாயம் தன்னிலிருந்து கவனத்தை திருப்பாமல் அதே சமயம் தங்களது போராட்டத்திலிருந்தும் விலகிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டன. தக்க தருணத்தில் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுதான்.

ஆனால் சதாம் உசேன் இந்த அரசியலை புரிந்துகொள்ள, செயல்படுத்த தவறினார்.அது அவரது கொலையில் போய் முடிந்தது,

விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரையில் இந்த இடத்தில்தான் அவர்களது தவறான முடிவெடுத்தார்கள் என்பது என் கருத்து, மேறகத்திய உலகம் அரசியல் பண்ணும்போது இவர்களும் பண்ண வேண்டியதுதானே.

ஆம்.

போர் நிறுத்தத்தை அறிவித்து விட்டு, அரசியலில் மும்முரமாக, அரசியல் பிரிவை வலுப்படுத்தி அரசுடனும், பல்வேறு நாடுகளின் மூலமும் நியாயமான தேர்தலை நடத்த சொல்லி வேட்பாளர்களை நிறுத்தி சர்வதேச சமுதாயத்தின் நன் மதிப்பை பெற்றிருக்கலாம்.

இவை அனைத்தும் 3 வருடங்களுக்கு முன்னேயே செயல் படுத்தி, பல உயிர்களை பலி கொடுக்காமல் இருந்திருக்கலாம். தமிழ் மக்களாவது மிச்சப்பட்டிருப்பர். ஆனால் இப்போதய நிலை...............

ஆனால் ஒன்றை புரிந்து கொள்வது முக்கியமானது சதாம் உசேன் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பிர்க்கு பின் இருக்கும் எண்ணெய் அரசியல் போல, சில இயக்கங்களையும், சில நபர்களையும் அழிக்க வேண்டும் என்று ஆதிக்க சக்திகள் நாடினால் அதை எந்த வகையிலும் முடித்தே தீர்வர், எந்த அரசியலும் அங்கு எடுபடாது...........

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

பத்மா சுவாமிநாதன் said...

மிகச்சரியான கருத்து...
புலிகளின் பேரழிவிற்கு இதுவும் ஒரு காரணம்...

Post a Comment