Pages

Tuesday, January 18, 2011

மொழி மற்றும் பிராந்திய வெறி தகுமா?


மொழி என்பதன் அர்த்தமாவது மனிதன் தன் உள் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்த உபயோகிக்கும் ஒலியின் ஏற்ற இரக்கங்களே அன்றி எந்த ஒரு மனிதனுக்கும் அவன் பேசும் மொழிக்கென பிரத்யேகமான சிறப்பம்சம் ஒன்றும் இல்லை.

பல விதமான மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட நாடு நம் இந்தியா.

பல்வேறு நாடுகளில் நடக்கும் கலவரங்கள், இனப்படுகொலைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றிர்க்கு காரணம் அந்தந்த பிராந்திய மக்கள் பேசும் மொழியை அடிப்படையாக கொண்டதாக அமைகிறது.

நமது இந்தியாவிலும் அதுபோல பல மாநிலங்களை சொல்லலாம் உதாரணமாக கர்நாடகா-தமிழ்நாடு-கேரளா, மகாராஷ்டிரா அதன் அருகில் உள்ள மாநிலங்கள் என அனைத்து மாநிலங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மத்திய கிழக்கில் வேலை நிமித்தமாக இருக்கும் நபர்கள் இதை நன்கு உணரலாம் உதாரணமாக மலையாளிகள் - தமிழர்கள். மத்திய கிழக்கை பொறுத்தவரை மலையாளிகள் ராஜ்ஜியம்தான், வேலையாகட்டும், பெரிய பதவிகள் ஆகட்டும் அனைத்திலும் அவர்களே கோலோட்சி இருப்பதை பார்க்க முடியும். என்ன விலை கொடுத்தாலும் அவர்கள் ஆட்களே தனது நிறுவனத்தில் நுழைப்பதை காண முடியும். தமிழர்களை பாண்டிகள், அண்ணன் மார்கள் என்று கிண்டலாக அழைப்பதையும் பார்க்கிறோம்.

ஏன் இப்படி?

மற்ற நாட்டவர்களைப் பொருத்தவரை அனைவரும் இந்திய மக்களாகத்தான் பார்க்கப் படுகின்றனர், ஆனால் நமக்குள் உள்ள இந்த உள் குத்துதான் பிரச்சினையே, சரி வெளிநாடுகளில்தான் இந்த பிரச்சினை உள்நாட்டில் நிலைமை இன்னும் மோசம்.

ஆறுகள், தண்ணீர் தேக்கங்கள் என்பது உலக பொது சொத்துதான், இயற்க்கை வளங்கள் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானதுதான், மனிதனுக்காக பாகுபாடின்றி படைக்கப்பட்டதே அத்தனை இயற்கை வளங்களும், அதனால் அனைத்து மக்களும் அதை அனுபவிப்பதற்க்கு உரியவர்களே.

ஒரு மாநிலத்தில் அல்லது பக்கத்து நாட்டில் ஒரு ஆறு உருவாகி அது சரிவான இடம் நோக்கிப் பாய்ந்து கடலை அடைகிறது, ஒரு மாநிலத்தில் உள்ளவர்கள் அதை தன் தேவைக்குப் போக அதை அதன் போக்கிலேயே விட்டு விடத்தான் வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை இன்றைய நிலைமை.


பாலாற்று குறுக்கே அணை கட்டுவது தொடர்பான பிரச்சினைகளை நாம் அறியலாம், அரசு அதிகாரிகளே பொதுவாக ஒரு விடயத்தை அணுகாமல் குறுகிய எண்ணத்துடன் ஒரு சார்பாக அவர்கள் மொழி பேசும் மாநிலத்தின் சார்பாக நடந்துக் கொள்வது நடக்கிறது.


கர்நாடாகா-தமிழ்நாடு பிரச்சினை காவிரியில் ஆரம்பித்து நடிகர்களின் படங்களின் வெளியீடு வரை தொடர்கிறது. இது ஒரு மோசமான நிலைமைதான். நடுவர் மன்றம் தீர்ப்புகளையே மீறும் அத்துமீறல்களும் நடந்த்ததை நாம் அறிவோம்.


உலகில் மூன்றாவது உலக யுத்தம் நடப்பதென்றால் அது தண்ணீர் பிரச்சினைக்காக தான் இருக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.


வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பும் தகுதி அடிப்படையில் அல்லது விகிதாச்சார முறைப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், அதை விடுத்து என் மாநிலத்தில் உள்ளவனுக்குதான் வேலை வேண்டும் என்பது மிகத் தவறான வாதமே.

இந்தியாவில் உள்ள மக்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் வாழும் உரிமை உள்ளது அதைவிடுத்து இந்த மொழி பேசுபவந்தான் இங்கு வசிக்க வேண்டும் என்பது மிக மிக குறுகிய எண்ணமே.

தனது மொழியை அழியாமல் பார்த்துக் கொள்வதில் அந்த மொழி பேசும் மக்களுக்கு அக்கறை இருக்கவேண்டியதுதான் ஆனால் அது தீவிரவாதமாக மாறுவது ஏற்றத்தக்கது அல்ல.

தமிழ்தீவிரவாதிகள், கர்நாடகதீவிரவாதிகள், மாராட்டிய தீவிரவாதிகள் இது அணைத்தும் ஏற்புடையதல்ல பொது இந்தியாவிற்கு. ஆனால் எவ்வளவு சொன்னாலும் பொதுவாக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமது மனதிற்க்கு இன்னும் வரவில்லை என்றுதான் தெரிகிறது. அதன்படி நாடுகளும், மாநிலங்களும் தண்ணீர் பிரச்சினைக்காக அடித்துக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நம்மால் உணரமுடிகிறது.


தெலுங்கானா
தனி தெலுங்கானா பிரச்சினையும் நம்மை கவலை கொள்ள வைக்கிறது ஆந்திராவில் எதிர்கட்சிகள் வேண்டுமானால் அதை அரசியலாக்கலாம் ஆனால் மாணவர்கள் அந்த வகையான போராட்டங்களில் கலந்து கொள்வது, கலவரங்களில் ஈடுபடுவது, நம்மை கவலையில் ஆழ்த்துகிறது, இப்படி ஆளாளுக்கு தனி பிராந்தியம் என பிரித்து பார்த்தால் அதற்காக ஆயுதமேந்தி போராட ஆரம்பித்தால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் ஒறுமை பாட்டுக்கே ஊறு விளைவிக்கும்.


 சர்வதேச அளவில் இந்திய மூளைக்கென்று மிகுந்த மதிப்பும் மரியதையும் உள்ளதை எம்மால் அனுபவ ரீதியாக உணரமுடியும் ஆனால் நாம் இதேபோல் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் போராட்டங்களை கையிலெடுத்து போராடிக் கொண்டிருந்தால் சர்வதேச அளவில் இந்திய மதிப்பு சரியத் தொடங்கும் என்பது உறுதி, உள் நாட்டு பிரச்சினையில் சிக்கி நாம் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான், நாடு ஒன்றும் முன்னேறாது.

 உலகில் இன வாதம், மதவாதம், தேசிய வாதம் இந்த மூன்றும் யார் பேசினாலும் தவறே, எந்த மக்களையும் அனைவரும் மக்களாகத்தான் பார்க்க வேண்டும்.                                                                                                                                            
                  



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

அமைதி அப்பா said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

Post a Comment