நம் மக்கள் கடைபிடிக்கும் மவுனம் இருக்கிறதே!!! அந்த முரட்டு மவுனம் அசாத்தியமானது, ஆம். உலகில் உலகத்தை விடுங்கள் இந்தியாவில் மற்ற மக்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமலும், பட்டும் படாமலும், விட்டு விடுவதில் நம் மக்களுக்கு நிகர் யாருமில்லை,


அண்மையில் நடந்த பரமகுடி சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு சும்மா ஒரு வாய்மொழி அறிக்கையோடு சரி. தலித்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது, அவர்களுக்காக போராடுபவர்களும் தாங்கள் slogan களாக வைக்கப்படும் திருப்பி அடி, திருப்பி புடி etc...ஒன்றும் புரியவில்லை நமக்கு. கூட்டத்தை காண்பித்து சீட் வாங்கி உட்கார்ந்தாகி விட்டது அவ்வளவுதான் ஏனெனில் கூட்டணி ஆயிற்றே ஒன்றும் பேச முடியாது.

காஷ்மீரில் வாரத்திற்கு ஒரு முறை காணாமல் போகும் நபர்கள் பற்றி, நமது இராணுவம் நிகழ்த்தும் வல்லுறவுகள் பற்றி, நடையில் உள்ள கடுமையான சட்டங்கள் பற்றி, ஒரு மாநிலமே அந்த மக்களே சில வருடங்கள் பின் தங்கிய நிலைபற்றி, இவையெல்லாவற்றையும் பற்றி அந்த மக்கள் தனது குடும்பத்தோடு தெருவில் வந்து போராடினாலும், ஒரு நாதியில்லை சீண்டுவதற்கு, ஆதரவாக குரல் கொடுக்க யாருமில்லை, உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை.
நன்றாயிருக்கிறது நம்மவர்கள் காக்கும் இந்த முரட்டு மவுனம்
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
4 comments:
முரட்டு மவுனம்........
இப்படிகூட சொல்லாம்தானே
முரட்டு பயம்
முதலில் உங்களது வருகைக்கும் சிரமம் பாராத பின்னூட்டத்துக்கும் நன்றி! எழுதுவது எனக்கு பிடிக்கும் அது மொக்கையாக, கவிதையாக , சினிமா விமர்சனமாக , சமுதாய கோபமக இப்படி எதுவானாலும் எனக்கு தோன்றியதையே எழுதுகிறேன். இது தான் இவன் என்று யாரும் எனக்கு முத்திரை குத்துவதை விருப்பவில்லை! அதனால் தான் நீங்களே சொன்னீர்களே //// சரி சார் தீவிரமாக முத்தம், கண்ணி கள் என்று ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் என்று எண்ணி சன்னலை மூட வந்த நான் இந்த கோபிநாத் பதிவு கண்ணில் பட அரை தூக்கத்தில் படிக்க ஆரம்பித்து முற்றிலும் தூக்கம் கலைந்து நடு இரவு 2 மணிக்கு மேல் ஆனாலும் பரவாயில்லை என்று//// அது போல் பல துறைகளிலும் எழுத வேண்டுமென்பதே எனது விருப்பம். ஆபாசமானாலும் எனக்கு தெரியாத ஒன்று இருக்கக்கூடாது என்று தேடி படிக்க முயற்சி செய்கிற ஆள்!
மற்றப்படி நீங்கள் என்னிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு என்னிடம் சரக்கு கிடையாது நண்பரே! அந்த கருத்து உங்களின் பாராட்டும் குணத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. இன்றிலிருந்து நானும் உங்களை பின்தொடர்கிறேன். உங்களிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது !! சந்திக்கலாம், மீண்டும் எனது தளத்துக்கு வருகை தந்ததற்கு நன்றி!
வணக்கம் சொந்தமே!இன்று இத்தளம் வரக்கிடைத்தது மகிழ்ச்சி.இந்த மௌனம் ஆபத்தானது.நாம் பேச வேண்டிய இடங்களில் பேசாமலும்,பேசக்கூடாத இடங்களில் பேசியும் விடுகிறோம்.இங்கும் அதே நிலை தான்.அடக்குமுறைக்காக பயம் சூட காரணமாயிருக்கலாம் சொந்தமே!வாழ்த்துக்கள் இப்பதிவிற்காய்.சந்திப்போம் சொந்தமே!
வணக்கம்
அர்த்தமுள்ள கருத்துக்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
Post a Comment