கடந்த வாரம் பாலிமர் டிவியில் ஒரு விவாதம், ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனைக்காக காத்திருப்பவர்களை தூக்கில் போடக்கூடாது என்பவர்களும் - எதிர் தரப்பில் காங்கிரஸாரும் விவாதித்தனர்.

குஜராத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காக யாரும் தமிழகத்திலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.
ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டபிறகு, காஷ்மீரின் பரூக் அப்துல்லாஹ் இன்னும் சிலர் அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றும்வோம் என அறிக்கை விடுத்தனர். உடனே கொக்கரித்தனர்் காவிகள்.
இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.
இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.
நாம் இந்தியர்கள் என்றால் நீதி எல்லோருக்கும் தானே! இவர்களுக்காக தமிழகத்திலிருந்து யாரும் குரல் கொடுத்ததாக தெரிய வில்லை.
நாம் இன்னும் பழமையில்தான் இருக்கிறோம். அதாவது, என் மொழி பேசுபவன் என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் போராடுகிறோம், மற்றவர்கள் மற்ற மாநிலத்தவர்கள், மற்ற மொழி பேசுபவர்கள் என்றால் ஒரு அறிக்கை கூட விடுவதில்லை. ஆனால் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் இ.வெ.ரா பெரியார் இன்றுள்ள தலைவர்கள் போல் அல்ல, கேரளாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்பதை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.
ஆனால் தற்போது மொழி என்ற இந்த குறுகிய வட்டத்திற்க்குள் இருந்து கொண்டு தன் மொழிச்சார்ந்தவருக்காக போராடுபவர்கள் எப்படி நீதி மான்கள் ஆவார்கள், அவர்கள் எப்படி நியாயமான அரசியல் வாதிகள் ஆக முடியும்? அவர்கள் எப்படி ஜனநாயகத்தை நிலை நாட்டுவார்கள்? அவர்கள் யாரக இருந்தாலும் என்ன? எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன அல்லது சமீபமாக ஈழ விடுதலைக்காக(!) கவனிக்கத்தக்க வகையில் நெடுங்காலமாக போராடும் நெடுமாறன்கள் ஆகட்டும் அல்லது புதிதாக வந்து தொண்டை கிழிய பேசும் சீமான்களாகட்டும்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!!!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment