அஸ்ஃபக்குல்லாஹ் கான்
பிறந்தது ஷாஜஹான்பூர் - உத்திரபிரதேச மாநிலம்
பிறந்தது ஷாஜஹான்பூர் - உத்திரபிரதேச மாநிலம்
இளமையிலேயே சுதந்திர தாகம் எடுத்தது அவருக்கு, அது அவரை ஒரு நல்ல கவிஞராகவும் ஆக்கிற்று.
அவரது பள்ளிப்பருவத்தில் மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப் பட்ட ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வர அதனால் அதிருப்திக்குள்ளான இளைஞர்களில் அஸ்ஃப்பக்குல்லாஹ் கானும் ஒருவர்.
அவரையொத்த விடுதலை வேங்கைகள் கிடைத்தனர் அவருக்கு.
அஸ்ஃபக்குல்லாஹ் கான் மற்றும் பண்டிட் இராம் பிராசாத் பிஸ்மில் ஆகியோர் இணைந்து மற்ற புரட்சிக்காரர்கள் ஒன்றினைக்கப் படுகின்றனர்.
மெதுவான பேச்சுவார்த்தைகள் ஒன்றும் வேலைக்கு ஆகாது, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை குலை நடுங்க வைக்கவேண்டுமானால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படவேண்டும். அதற்கு தங்களுக்கு வெடிகுண்டு, துப்பாக்கிகள் இன்ன பிற சாதனங்கள் வேண்டும், அவற்றை வாங்க பெரிய அளவு பணம் வேண்டும்.
பொது மக்களிடம் பணம் வாங்க முற்பட்டு அது நாளடைவில் குறைய பிறகு ஆங்கிலேய அரசு கருவூல பணத்தை கொள்ளை அடிக்க முடிவெடுக்கின்றனர் புரட்சிக் காரர்கள்.
ஆகஸ்ட் 9, 1925 முடிவு செய்தாகி விட்டது.
லக்னோவிற்கு அருகில் உள்ள கோரக்பூரில் வைத்து இரயிலில் ஏற்ற வரும் கருவூல பணத்தை கொள்ளை அடிப்பதென.
அதற்கான திட்டமும், நபர்களும் உறுதி செய்யப்பட.
வெற்றிகரமாக நடந்து முடிந்தது கொள்ளை ஆனால் ஆங்கிலேயர்களால் செப்டம்பர் 25, 1925 அனைவரும் பிடிபடுகின்றனர் அஸ்ஃபபக்குல்லாஹ் கானை தவிர, அவர் பிஹாருக்கு தப்புகிறார்.
சுதந்திர போரை மேற்கொண்டு முன்னிருத்த வெளிநாடு சென்று பொறியியல் கற்று பணமும் சேர்த்துவர எண்ணுகிறார் அதற்காக டில்லி செல்கிறார் அங்கு வைத்து கைது செய்யப்படுகிறார்.
சிறை வைக்கப்படுகிறார்
சிறையில் காவல்துறை அதிகாரி இந்து - முஸ்லீம் என்று மத ரீதியாக அவரை பிரித்தாள சூழ்ச்சி செய்கிறார். காவல் துறை அதிகாரியால் அனுப்பபட்டவனிடம் அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் சொல்கிறார் “ஆங்கிலேயர் ஆளும் இந்தியாவை விட இந்துக்கள் ஆளும் இந்தியா எவ்வளவோ மேல்” என்கிறார்.
அஸ்ஃப்பக்குல்லாஹ் கானுடன் மற்ற அனைவரையும் சேத்து கோரக்பூர் சம்பவம் கோர்டுக்கு வருகிறது
1) அஸ்ஃப்பக்குல்லாஹ் கான்
2) இராம் பிராசாத் பிஸ்மில்
3) இராஜேந்திர லாஹிரி
4) தன்கூர் ரோஷன் சிங்
ஆகிய நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது ஆங்கிலேயே அரசால்.
சிறையில் இரண்டு வெள்ளைகார போலீஸ் அதிகாரிகள் அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையை கண்காணிக்க அப்பொழுது அவர் தொழுது கொண்டிருக்கிறார், அவர்கள் இருவரும் பேசிக் கொள்கின்றனர் “ இந்த எலியை நாளை தூக்கில் போடும் வரை எவ்வளவு பக்தி மீதமிருக்கிறது என்பதை நான் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று.
திங்கள் டிசம்பர் 19, 1927 அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் தூக்கு மேடை ஏறுகிறார்.
கயிற்றை முத்தமிடுகிறார், பிறகு சொல்கிறார்.
“என் கை கறை படிந்தது அல்ல இவர்களை கொன்றதனால், இவர்கள் எனக்கு இன்று அநீதி இழைக்கலாம் நாளை இறைவன் எனக்கு நீதி வழங்குவான்” ,
“இறைவன் ஒருவனே அவனது தூதராக முஹம்மத் அவர்களை ஏற்கிறேன்” என்கிறார்.
தூக்கு கயிறு இருக்குகிறது,
இந்தியா ஒரு சுதந்திர வேங்கையும், சுதந்திரவானில் மின்னும் நட்சத்திரத்தையும் இழக்கிறது.
நன்றி: இந்திய முஸ்லீம்கள் மற்றும் செய்திகள், விக்கிபீடியா