Pages

Tuesday, May 25, 2010

குற்றாலதிற்க்கு போகலாம் வாங்க




சுட்டெரிக்கும் வெயில், சாலைகளில் நடக்கவோ,வாகனங்களிலோ செல்ல முடியவில்லை சூடு, எங்கு திரும்பினும் சூடு, போதாகுறைக்கு மின்வெட்டு. இரவிலும் ஓடுகிறது வியற்வை. என்ன செய்ய. இறைவன் அருளால் வந்ததே லைலா. மாற்றிப் போட்டது கால சூழ்நிலையை அதனால் தென் மேற்கு பருவமழை முதலில் தமிழ் நாட்டிலேயே ஆரம்பிக்கப்போகிறது.

கோடையில் மண்டையில் ஏற்ப்பட்ட சூடு தணிய ஏற்ற இடம் குற்றாலம். ஊட்டி, கோடைக்கானல் போன்ற இடங்கள் சூழ்நிலையை குளிராக வைத்துக்கொள்ளும், உடல் சூட்டைத்தணிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இயற்கையான, மூலிகை கலந்த(சில அருவிகளில்)தண்ணீர் எங்கு கிடைக்கும்.ஆக குற்றாலமே சிறந்தது. குளி குளி என்று குளித்துக்கொண்டே இருக்கலாம். சளி பிடிக்காது,ஜுரம் வராது(conditions apply).ஆனந்தம்தான் போங்கள்.

குற்றாலத்திற்கு நம் பஸ் நுழையும் முன்னேயே அவ்வூரின் குளிர் நம்மை வரவேற்கும் , குளிர்ந்த காற்று, காற்றுடன் கூடிய சாரல், ஆஹா தென்காசியை தாண்டியவுடன் நம்மை வரவேற்கும் குற்றாலத்தின் இயற்கை அழகும்,வனப்பும்.

பஸ்ஸை விட்டு இறங்கி வீடு தேடுவது தான் குற்றாலத்தில் நாம் சந்திக்கும் முதல் பிரச்சினை, family ஆக இருந்தால் அதற்க்கு தகுந்தார்போலும், புதிய தம்பதிகள் ஆக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் அமைய வேண்டும் ரூம். எல்லாரும் முன்னிலை படுத்துவது அருவிக்கு பக்கத்தில் தங்கும் இடம் வேண்டும் என்று. அப்படி எதிர் பார்ப்பதால் சீசனில் ரூம் கிடைக்க பெரும் தடுமாற்றம் வரும். போட்டியும் இருக்கும். அதனால் ரூம் சொந்தக்காரர்கள் வாடகையை ஒரே அடியாக உயர்த்தி விடுவார்கள்.

அதனால் குற்றாலத்திற்கு காலையில் போய் இறங்குவது உசிதமல்ல, போனால் மாலையில் போய் இருந்குவது மாதிரி உங்கள் பயணத்தை அமைத்து கொள்ளுங்கள், அப்படி காலையில் போய் இறங்கினாலும் மாலையில் போய் ரூம் தேடுங்கள். நல்ல விலைக்கு கிடைக்கும், குறிப்பாக வாகன வசதி இல்லாதவர்கள் அருவிகளுக்கு பக்கத்திலேயே ரூம் அமையும் படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக சிற்றருவி, மெயின் அருவி போன்ற.

காலையில் ஆரம்பித்து சாயங்காலம் வரையிலும் நீங்கள் குளிக்க முடியாது அவ்வளவு கூட்டம் குளிக்கும் அருவிகளில், அதனால் சோம்பல் பார்க்காமல் காலை 4 மணிக்கு எழுந்து குளிக்க முடியுமா என்று முயன்று பாருங்கள். ஆனால் பெண்கள் குளிக்க சரியான சமயம் இரவு 12 மணிக்கு அப்புறமும் காலை 5 மணிக்கு முன்பும், ஆனால் ஆண் துணையுடன்.

பகலில் குளிப்பதால் போலீஸ் அடி வாங்க வேண்டியது வரும்.

பெண்களை புடவையுடன் குளிக்க சொல்லாதீர்கள் பெண்களுக்கு nighty என்ற இரவில் உடுத்தும் ஆடையே சிறந்தது, தாவணியுடன்.

குளிக்க போகும்போது எண்ணெய் தேய்த்துக் கொள்ள, மசாஜ் செய்துக் கொள்ள வேண்டி அங்குள்ள யாரிடமும் சென்றுவிடாதீர்கள், அவர்களில் யார் அனுபவம் உள்ளவர்கள் என்று நம்மால் கணிக்க முடியாது.

அதனால் நீங்களோ அல்லது நண்பர்களோ, குடும்பத்தில் உள்ளவர்களையோ தேய்த்து விட சொல்லுங்கள்.அது போதும்.

இரவில் குளிப்பதே சிற்ந்தது, கூட்டமும் இல்லாமல் இருக்கும்.

மது அருந்தி விட்டு குளிக்க செல்லாதீர்கள் அது மிகவும் ஆபத்து,

குற்றாலத்திற்க்கு சென்றவர்கள் பாபநாசமும் சென்று பார்க்கலாம் அகஸ்தியர் அருவி போன்றவை அருமையாக இருக்கும்.

பழைய குற்றாலத்திற்க்கு செல்ல வேண்டாம் தண்ணீர் அதிக நாட்களில் அதிகமாக வராது.

குடும்பத்துடன் சென்றுகுளிக்க சிறந்த இடம் மற்றும் நேரம் இரவே அதுவும் மெயின் அருவியில் மட்டுமே, மற்ற அருவிகளில் இரவில் குளிக்க செல்ல முடியாது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:

Post a Comment