Pages

Wednesday, October 20, 2010

Followup - பாபர் ஹூமாயூனுக்கு எழுதிய உயில்



எனது முந்தைய பதிவில் பாபர் ஹூமாயுனுக்கு எழுதிய கடிதம் என்ற தலைப்பில் ஒரு தகவல் எழுதியிருந்தேன் அது நான் மேடைப்பேச்சில் கேட்டதே, அதை நான் உண்மை என்று என்னால் வாதிட முடியாது.

ஆனால் தற்போது ஆனந்தவிகடன் 13/10/10 பதிப்பில் பக்கம் 106ல் பாபர் தன்னுடைய மகனுக்கு எழுதிய உயிலின் வார்த்தைகள் அப்படியே தங்களின் பார்வைக்கு....

’மகனே! நீ உனது மனத்தை, குறுகிய மத உணர்வுகள், தவறான எண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லாப் பிரிவினர்களும் பின்பற்றுகிற மத சம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும், மத வழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்பு கொடுத்து, பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும். நீ மற்ற சமூகத்தினரின் வழிப்பாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச்சேதப்படுத்தக் கூடாது. அடக்குமுறை என்ற வாளைவிட, இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற வாள் மூலம் இஸ்லாமைப் பரப்புவதுதான் அதிக பலன் தரும்’

இப்படி இருக்கும் போது குறிப்பாக அந்த இடத்தில் இந்துக்கள் புனிதமாக கருதும் இடத்தில் கோயில் இருந்திருந்தால் அதை எப்படி பாபர் இடிக்கச் சொல்லி இருப்பார். நிச்சயம் இருக்காது...

நன்றி : ஆனந்த விகடன்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

7 comments:

தனபால் said...

திரு உலக அமைதி ,

///இப்படி இருக்கும் போது குறிப்பாக அந்த இடத்தில் இந்துக்கள் புனிதமாக கருதும் இடத்தில் கோயில் இருந்திருந்தால் அதை எப்படி பாபர் இடிக்கச் சொல்லி இருப்பார். நிச்சயம் இருக்காது...///

///நிச்சயம் இருக்காது/// என்று உறுதியாகத் தீர்ப்பு வழங்கி விட்டீர்களே ??? எப்படி சார்???

/// நீ மற்ற சமூகத்தினரின் வழிப்பாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச்சேதப்படுத்தக் கூடாது.///

என்று பாபர் கூறியதிலிருந்தே அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது அவர்கள் காலத்தில் நடக்கக் கூடியது தான் என்பது உங்களுக்கு புரிய வில்லையா???
நீங்கள் வரலாறுகளை கொஞ்சம் படியுங்கள்.

///அடக்குமுறை என்ற வாளைவிட, இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற வாள் மூலம் இஸ்லாமைப் பரப்புவதுதான் அதிக பலன் தரும்’///

இதிலிருந்து அடக்குமுறை என்ற வாளின் உதவியால் மதம் மாற்றியிருப்பதும், அப்படி செய்வது அதிக பலனைத் தராது என்று பாபர் கூறியிருப்பதும்,இஸ்லாத்தை பரப்புவதில் அதிக பலன் வேண்டியே அன்பு , நன்றியைப் பயன்படுத்த பாபர் அறிவுரை வழங்கியிருப்பதும், பாபருக்கு இந்துக்களை இசாமியர்களாக மாற்றும் நோக்கம் இருந்தது என்பதும் இதன் மூலம் தெளிவாகத் தெரியவருகிறது.

முஹலாயர்கள் இந்துத் கோவில்களை இடிப்பது உலகமறிந்த உண்மை .இடிக்கப்பட்ட கோவில் கட்டடங்களுக்கு மேல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதை அகழ்வாராய்ச்சி தெரியப்படுத்துகிறது.

பாபர்ஆரம்பத்தில் இந்துக் கோவில்களை இடிக்க உத்தரவிட்டு பின் அதனால் மக்களிடம் ஏற்ப்படும் வெறுப்பினால் இஸ்லாமை பரப்புவதில் அதிக பலன் இருக்காது என்று கருதி அப்படிச் செய்ய வேண்டாம் என்று தன மகனுக்கு அறிவுரைக் கூறியிருக்கலாம்.

Gnana Prakash said...

nalla irukku...

Anonymous said...

Your Father could have advised you not to take others property, not to bribe, not to be a decoit.
If so, was your father a decoit.

உங்களில் ஒருவன் said...

திரு தனபால் அவர்களே தங்கள் கருத்திற்கு நன்றி,

போர் என்பதே அத்துமீறல் தான் அதாவது எதிரி நாட்டை வென்றவுடன் அங்குள்ள சொத்துக்களை சூறையாடுவது, மத வழிபாட்டுத்தலங்களை அழிப்பது, அநாவசியமாக படுகொலைகள் செய்வது, தண்ணீர் தேக்கங்களை சேதப்படுத்துவது, அந்நாட்டின் வளமையான பிரதேசங்களை பாழ்படுத்துவது என்பன, இவை தங்களுக்குத் தெரிந்துருக்கும். இது ந்ம் உள்நாட்டு மன்னர்களே செய்திருக்கின்றார்கள்.

நீங்கள் சொல்வது போல் மற்ற மடையர்கள் வழிபாட்டுதலங்கள் சேதப்படுத்தியதால் தனது மகனும் அதையே செய்துவிடாதவாறும், அங்குள்ள மக்களின் நன்மதிப்பினை பெறவேண்டும் என்றுதான் பாபர் தனது மகனுக்கு அறிவுறுத்துகிறார்.

இங்கு சொல்லவருவது என்னவெனில் மேற்படி நல்ல சிந்தனையுள்ள பாபர் மிக முக்கியமாக கருதும் அக்கோயிலை அழித்திருப்பாரா? என்பதுதான்.

பாபர் பள்ளியின் கீழ் அகழ்வாராய்ச்சிபடி கோயில் இருந்ததென்றால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

யார் ஒருவர் தான் சார்ந்திருக்கும் கொள்கை நல்லது என்றும், மனித வாழ்க்கைக்கு உகந்தது என்றும் கருதும் பட்சத்தில் அக்கொள்கையை பரப்புவதில் தப்பில்லை, கேட்பவர்கள் அக்கொள்கையை அது காட்டும் வழிமுறைகளை ஆராய்ச்சிக்குட்படுத்தலாம். ஏன் இந்துக்கள் மட்டும் அல்ல,சீக்கியர்கள்,புத்த மதத்தினர் அனைத்து மததினரும் தாங்கள் சார்ந்துள்ள கொள்கையை மற்றவர்களுக்கு சொல்லலாம், ஆனால் அப்படி யாரும் சொல்லவருவதில்லை. தாங்கள் சார்ந்திருக்கும் கொள்கைகளை சொல்லவும் மாட்டார்கள் வெளியாட்களை அனுமதிக்கவும் மாட்டார்கள், ஆனால் தங்கள் கொள்கையை மறுபரிசீலனை அல்லது ஆராய்ச்சிக்குட்படுத்தவோ அவர்கள் விரும்புவதில்லை.

எப்படி பூமிக்கு அழிவு ஒரு விண்கல் மூலம் வருமென்றால் அனைத்து நாடுகளும் இனைந்து வளிமண்டலத்திலேயே அதை ராக்கெட் தாக்குதலுக்குள்ளாக்கி அழிக்க உலகில் உள்ள எதிரி நாடுகள் கூட ஒன்றினைந்து செயல் பட விரும்புகின்றதோ அதுபோல் அகில உலகிற்கும் வழிகாட்டுதல் என்று படிப்பறிவில்லாத உலகின் ஒரு மூலையில் இருந்து அப்துல்லாஹ்வின் மகன் முகம்மது என்ற மனிதர் சொல்லும்போது அதை ஏன் நாம் ஆராய்ச்சிக்குட்படுத்தக்கூடாது? உலகிற்கு ஆபத்து என்று வரும்போது ஒன்றினைய நாம் விரும்பும் போது, உலக மக்களுக்கு நல்லது இதுதான் என்று ஒருவர் சொல்லும் போது அதை ஏன் நாம் ஆராய்ச்சிக்குட்படுத்தக்கூடாது? இதுதான் என் கேள்வி.

அ.மு.அன்வர் சதாத் said...

மதிப்பிற்குரிய சபீக், உங்களின் கட்டுரை மிகவும் சரியானது.திரு தனபால் அவர்கள் தயை கூர்ந்து இந்தியாவில் உள்ள கோயில்களின் வரலாறு படிக்க வேண்டுகிறேன்.ஏனெனில் பல கோயில்கள் புத்த விகார்களையும், சமண மடங்களையும் உடைத்து அபகரித்து எழுப்பப்பட்டவை.ஆதாரம் வேண்டும் எனில் தமிழ்நாடு ஆவண காப்பகம் சென்று புத்த, சமண மத சொத்துக்கள் உடைய தஸ்தாவேஜுகளை பார்க்கவேண்டுகிறேன்.

அன்புடன்
இந்திய மக்கள் அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ விரும்பும்.
பாரதத்தான்

உங்களில் ஒருவன் said...

சகோதரர் அன்வர் அவர்களின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது, வருகை மற்றும் தங்களின் பாராட்டிற்கு நன்றி அன்வர் ஜி.

Anonymous said...

those days humanity was there. Now religion and politics has covered the humanity. people fear is not there. judgment days will come soon.

Post a Comment