Pages

Tuesday, December 28, 2010

We Ate Poison - Follow up

 நமது சென்ற We Ate Poison பதிவில் நாம் உண்ணும் உணவில் விஷம் எப்படியெல்லாம் கலந்துள்ளது என்பதை Outlook ன் முந்தைய கட்டுரையை மேற்கோள் காட்டி சொல்லி இருந்தோம்.

தற்போது அதற்கேற்றார்போல் கேரளாவில் பிரபலமான பத்திரிக்கையான Manorama online ல் கடந்த டிசம்பர் 20ம் தேதி அதே போன்றதொரு கட்டுரை வந்ததாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார், அவரை நான் அதை மொழிபெயர்த்துக் கேட்டேன் முடியவில்லை வேலைப் பளு காரணம் என்றார். ஆனால் அதற்க்குண்டான சுட்டியை(மலையாளத்தில் அதை பார்க்க இங்கே சுட்டவும்) அனுப்பித் தந்திருந்தார் அதற்க்காக அவருக்கு நன்றிகள் பல.
 
அதேபோல் விகடனில் எழுதிவரும் சாரு நிவேதிதா அவர்களும் கேரளாவில் எண்டோசல்பான் என்ற பூச்சிமருந்தை குறிப்பிட்டு கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு எடுத்த முயற்ச்சியின் காரணத்தால் அங்கு அந்த மருந்தை தடை செய்ததாக எழுதியிருந்தார்.

மிகவும் மகிழ்ச்சி,

மற்றெல்லோரும் விழித்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர், ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் என்ன முயற்சி செய்வான் என்று தெரியவில்லை. 

முயற்சி செய்து ஏதாவது உருப்படியாக செய்தால் நன்றாக இருக்கும்.

அல்லது இயற்கை வேளாண்மைக்கு அனைவரும் திரும்பினாலும் மிகவும் நன்றாக இருக்கும், வயதானவர்கள் சொல்வார்கள் முன்பிருந்தது போல ஏது இப்போதுள்ள உணவில் சத்து கிடைக்கிறது என்பர். அந்த காலத்தில் நடந்த இயற்கை வேளாண்மையால் உடம்பிற்க்கு சத்து நிறைய, அதனால் கடின உழைப்பு செய்ய முடிந்தது, ஆனால் இப்போது சட்டி சோறு திண்ணாலும் அரை கிலோமீட்டர் கூட ஓட முடியவில்லை.
              
 என்ன செய்வது நாம் பருகும் நீர், உண்ணும் உணவு அனைத்திலும் விஷம், அதன் காரணத்தால் நிறைய மனிதர்களுக்கு உள்ளத்திலும் விஷம்......

நன்றி: சாரு நிவேதிதா, Manoramaonline.com




Friday, December 24, 2010

ஒபாமாவுக்காக ஒரு உடான்ஸ் கிராமம்

நமது மண் கெட்டு விடக்கூடாது, இராசாயண விவசாயம் ஆபத்தானது, இயற்கை விவசாயம் நன்மை பயக்க வல்லது, மக்கள் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என்று யார் பிராயசப்படுவார்கள் இந்த உலகைப் பற்றிய கவலை, மக்களைப் பற்றிய கவலை உள்ளவர்கள்தான்.

ஆனால் சமீபத்தில் இந்தியா வந்து சென்ற ஒபாமாவிடம் நாடும் நாட்டு மக்களும் வளர்ச்சியடைந்து விட்டார்கள் என்று ஏன் அவரிடம் காட்டவேண்டிய அவசியம் வந்ததென்று தெரியவில்லை.

உலகில் மிக அதிகமாக காற்று மண்டலத்தை மாசுப்படுத்துவதில் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கா, மாசு படுத்துதலை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இன்றுவரை கையெழுத்து போட மறுத்து வருகிறது அமெரிக்கா. 

சமீபத்தில் தென் அமெரிக்காவில் நடைபெற்ற அகில உலக கூட்டத்தில் கூட எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் முடிந்திருக்கிறது அக்கூட்டம்.

இதெல்லாம் இப்படி இருக்க ஒபாமாவுக்கு காட்டுவதற்க்காக இந்தியாவின்  மையத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது ஒரு கூத்து.

சமீபத்தில் பசுமை விகடன் 10/12/10ல் பக்கம் 16ல் வெளிவந்த கட்டுரைதான் மேலே உள்ள தலைப்பு.

கான்புறா..................அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்காக வீடியோ கான்ஃபரஸிங்கில் பேச வேண்டி தயாரிக்கப் பட்ட ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலமாக இந்த கிராமத்தில் உள்ளவர்களுடன் உரையாடியதால் உலகப்புகழ் பெற்றுவிட்டது இவ்வூர்.

நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இண்டெர்நெட் வசதி செய்து கொடுக்க திட்டம் வகுத்துள்ளது மத்திய அரசு அதை ஒபாமாவிடம் காட்ட இந்த கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதற்காக காண சென்றனர் குழுவினர்.

அவர்களுடன் அவ்வூர் வாசிகள் பேசியுள்ளனர் உண்மைகளை.

ஊரோ காய்ந்து, ஏரிகளோ வரண்டு போயுள்ள ஒரு கிராமம்.

பஞ்சாயத்து செயலாளர், ஒரு நர்ஸ், ஒரு M.B.A. மாணவர் என மூவர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேசிய அன்று பகலில் மின்சாரம் இருந்தது ஆச்சர்யம்!!

ஊரின் விவசாயம் செழிப்பதற்கு எந்த வழியும் இல்லை, கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் இல்லை.

ஊரின் சுகாதர நிலையத்தில் உள்ள ஆண் நர்ஸ் சந்தர்லால் 7000 பேர் இருந்தும் ஒரு மருத்துவர் இல்லை, நான் தான் நோயாளிகளுக்கு முடிந்த வரை சிகிச்சை அளிக்கின்றேன், அவசரம் என்றால் 10 கி.மீ செல்ல வேண்டும் மருத்துவரைப் பார்க்க. என்கிறார்.

உண்மை இப்படி இருக்க டெலிமெடிசன் உதவியால் சிகிச்சை அளிக்கப்படுவதாக ஒபாமாவிடம் பேசிய நர்ஸ் தெரிவித்துள்ளார்.

நேரில் போய் சொன்னாலே தண்ணீர்  கைப்பம்புகளை ரிப்பேர் பார்க்க ஆட்கள் வருவதில்லை ஆனால் ஊர் பஞ்சாயத்து செயலரோ இ-மெயிலில் புகார் அனுப்பிய உடனே புகார்கள் சரி பார்க்கப் படுவதாக சொல்லியுள்ளார் ஒபாமாவிடம்.

இது எப்படியிருக்கு...

ஏன் இப்படி நாடகமாட வேண்டும் என்று தெரியவில்லை, இந்தியாவின் இதயப்பகுதியில் உள்ள இக்கிராமத்தினர் சொல்கின்றனர் ஒபாமா பேசிய அன்றுதான் நாங்கள் வாக்களித்த மந்திரியை பார்க்க முடிந்தது என்று .

சரி, இப்படியெல்லாம் செய்து காண்பித்ததால் என்ன கிடைத்து விடப் போகிறது இந்தியாவிற்கு? ஆனால் வந்தவரோ 20,000 வேலை வாய்ப்புகளை வாங்கிச் சென்றிருக்கிறார் அவரது நாட்டிற்க்கு.

இந்தியா வேளாண்மை விவசாயத்தில் சிறந்து விளங்குகின்றது என்பதை பறை சாற்றவா? இந்திய அரசியல்வாதிகள் வேளாண் நிலங்களை பண்ணாட்டு கம்பெனிகளுக்கு பங்கு வைப்பதைப் பற்றி தனி புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.

ஆக இந்தியாவை சுரண்டி சுரண்டி சுடுகாடு ஆக்கிவிடுங்கள்.



நன்றி : பசுமை விகடன் மற்றும் குழுவினர்









Thursday, December 23, 2010

பேரரசர்கள் அழுவதில்லை

அன்பு நண்பர்களே,

பேரரசர் பகதூர் ஷா ஜாபர்அவர்கள் இந்தியாவை ஆண்டு வந்த சமயம், 

வெள்ளையர்களுக்கு கட்டுப்படாத ஒரு ஆட்சி,

முடிவெடுக்கிறார்கள். வெள்ளையர்கள் போர் செய்து ஒடுக்குகிறார்கள் அவரை, கைது செய்து நாடு கடத்தப் படுகிறார்,

அரசரும் அவரது புதல்வர்களும் கப்பலில் பர்மா அல்லது மியான்மர் கல்கத்தா மார்க்கமாக கொண்டு செல்லப் படுகிறார். 

அவருக்குத் தெரியும் நாம் திரும்பி வரமாட்டோம் என்று அதனால் தான் ஆட்சி செய்த நாட்டின் மீது அளவிளாத அன்பின் காரணத்தால் போகும் போது ஒரு கைப்பிடி இந்திய மண்ணை எடுத்துச் செல்கிறார்.

கப்பலில் பேரம் நடக்கிறது அவரை அடிபணிய வைக்க, மிரட்டப்படுகிறார். தங்களுக்கு கப்பம் கட்டி நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைக் காட்டப் படிகிறார், தனது புதல்வர்களை கொன்று விடுவதாகவும் பயமுறுத்தப்படுகிறார்.

மசியவில்லை.

சிறிது நேரம் கழித்து அவருக்கு துணியால் போர்த்தப்பட்ட ஒரு தட்டு வருகிறது, ஆங்கிலேய அதிகாரி புன்னகையுடன் வந்து தட்டில் உள்ள துணியை அகற்றுகிறான்

தட்டில் தனது 2 புதல்வர்களின் தலை,, பேரரசர் பகதூர்ஷா அவர்கள் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.

இதைக் கண்ட ஆங்கிலேய அதிகாரிக்கு ஆச்சர்யம், கோபம், வெறுப்பு, புதல்வர்களைக் கொன்றதன் மூலமும் அதை அவரிடமே காண்பித்தன் மூலமும் பகதூர்ஷாவை மனதளவில் காயப்படுத்த நினைத்த ஆங்கிலேய அதிகாரிக்கு அதிர்ச்சி, முகத்தில் எவ்வித மாற்றங்கலும் இல்லாமல் பகதூர்ஷா இருப்பதை கண்டு.

அதை பகதூர்ஷாவிடமே கேட்கிறான் நீங்கள் கலங்கவில்லையா, அழவில்லையா என்று அதற்கு பகதூர்ஷா அவர்கள் பதிலளிக்கிறார்கள் பேரரசர்கள் அழுவதில்லை. என்று

ஒரு கம்யூனிஸ்ட் சகோதரர் கூட்டத்தில் பேசியதிலிருந்து.....

Saturday, December 18, 2010

இன்றைய இளைஞர்களும் உலகாதாயக்கல்வியும் - பகுதி 2

    சென்ற பகுதியில் (சென்ற பகுதியை படிக்க) விவாதித்த இன்றைய இளைஞர்களுக்கு உலகாதாயக்கல்விதான் போதிக்கப்படுகிறது இந்நிலை நம்நாட்டிற்க்கு ஆபத்து இது போன்ற கல்விக் கொள்கை மனித தரத்தை சீழ் படுத்துமே அன்றி மேம்படுத்தாது என்று சொல்லி இருந்தோம் .

சென்ற பகுதியினை படித்த நண்பர்கள் பயனுள்ள கருத்துக்களை சொல்லி இருந்தார்கள் அது அவர்களின் சமுதாய அக்கரையைக் காட்டுகிறது. அவர்களுக்கு நன்றிகள் பல. 

நாம் சொல்ல வருவது என்னவெனில் தற்போதுள்ள பாடத்திட்டங்களில் வாழ்க்கைக் கல்வி போதிக்கப்படுவதில்லை உலகில் அம்மனிதன் வேலையோ அல்லது தொழில் தொடங்கவதற்க்கான கல்வி மட்டுமே போதிக்கப்படுகிறது, ஏனெனில் நண்பர் ஒருவர் சொன்னதுபோல கல்விக்கூடங்களும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே இயங்குகிறது, பாடத்திட்டங்களும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே தயாரிக்கப்படுகிறது அதில் உருவாகி வரும் ஆசிரியர் என்ன போதித்து விடப்போகிறார், பின் வரும் சந்ததிகளின் நிலையும்.............அதேதான்..........

உதாரணத்திற்கு இந்த மாதத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் மாநிலம் தழுவிய பொதுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது அதில் அங்கம் வகிக்கும் ஷங்கர் ராம சுப்பிரமணியத்திடம் சன் டே இந்தியன் இதழ் அவரிடம் பேட்டி காண்கின்றது அப்பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி இது தான் :- இன்றைய கல்வி முறையில் சுதந்திரமான சிந்தனையும் சமூக உணர்வும் உள்ள ஒரு குடிமகன் உருவாகும் சூழல் உள்ளதா?

பதில்: பகுத்தரிவுப்பூர்வமான, பல் திறன்களை வளர்க்கும் கல்விமுறை இப்போது இல்லை. இப்போதுள்ள பாடத்திட்டங்கள் மாணவர்களால் உருப்போடப்படுகிறது, அதை அப்படியே எழுதுங்கள், வேலைக்குப்போய் நன்கு சம்பாதியுங்கள் என்ற மனப்போக்கில்தான் கல்வு அமைப்பு இருக்கிறது


அவர் சொன்ன பதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது இந்தியாவின் கல்விக் கொள்கை எப்படி உள்ளது என்று, குழந்தைகளை பரிட்சைக்குத் தயார்ப் படுத்தவே ஆசிரியர்களும், பாடங்களும் அமைந்துள்ளனவேயன்றி அக்குழந்தைகளின் நல் வாழ்வுக்கு அவர்களின் நல்ல மன நிலைக்கு உதவவில்லை.

சென்ற கல்வியாண்டில் மட்டும் 250 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நீதிபதி தற்கொலை செய்துள்ளார், கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர்(Manager) தனக்கு ஏற்பட்ட சிக்கல்களினால் தற்கொலை செய்துள்ளார் இன்னும் எவ்வளவோ..... இதிலிருந்து என்ன தெரிகிறது,

மனிதன் படித்த படிப்பு அம்மனிதனது  சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வில்லை அதனால் அம்மனிதன் பாரிய, மீளா முடியாத துயரமான முடிவெடுத்து விடுகிறான். எவ்வளவு பெரிய இழப்பு. பெரும் படிப்பு படித்தவர்களின் இந்த முடிவினால் நாம் ஸ்தம்பித்துப் போகிறோம்.

இன்றுள்ள உலகில் உள்ள இளைஞர்களால் தன்னை பெற்றெடுத்த பெற்றோர்களை பேணிப் பாது முடிகிறதா? நம் எல்லோருக்கும் தெரிந்துதிருக்கும், சமீபத்திய ஆய்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள் இந்தியாவில் பெற்றவர்களை நிர்கதிகளாக்கும் நிலைமை தற்போது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதில் அதிகமான பாதிப்பிற்குள்ளானவர்கள் இருப்பது சென்னையில் தான், விருந்தோம்பலை ஓங்கிப்பிடிக்கும் தமிழகத்திற்க்குத்தான் இந்த நிலைமை, இது யாரால்,

தான் பாடுபட்டு, அலைந்து திரிந்து, என்னவெல்லாம் இன்னல்கள் உண்டோ அவ்வளவையும் சகித்து தான் பெற்ற பிள்ளைகள் இந்த உலகத்தில் எப்படியாவது, எங்காவது பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பிள்ளையை ஆளாக்கிய நமக்கு என்ன நிலைமை? மகன் ஏதோ வெளிநாட்டில் இருப்பான் அவன் குடும்பத்தோடு, அவன் பிள்ளை குட்டியோடு. நாம் இங்கு நமக்கு வந்த வியாதிக்கு மருந்து வாங்குவதற்கு கூட வாசலில் யாராவது போகிறார்களா, யாராது வாங்கித் தருவார்களா என்ற ஏங்கும் நிலைமை.

அப்பிள்ளை படித்து மேல்நாட்டில் உடனே வேலை கிடைத்து, விசா கொடுத்து அழைத்துக் கொள்ளும் அளவுக்கு மிக உயர்ந்த படிப்பு படித்த பிள்ளைக்கு தெரிய வில்லை தான் அனுப்பும் பணம் அல்ல தன் பெற்றோர்கள் எதிர்ப் பார்த்தது என்று, அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பும், தள்ளாத வயதில் தனக்கு ஆதரவும் தான் அப்பெற்றோர்களுக்கு தேவையானவை என்று. அப்படிப்பு ஏன் சொல்லித்தர வில்லை அவ் வுண்மையை அவர்களுக்கு.

மற்றோரு நண்பர் சொன்னார் மாணவர்களுக்கு சமுதாய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை போதிக்கலாமென்று ஒரு வகையில் ஒத்து வந்தாலும் இதிலும் சில தவறுகளைக்காணலாம். உதாரணத்திற்க்கு கம்யூனிஸ்ட்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லலாம்,.. சே குவாரா(அவர் சுருட்டு குடிப்பதை நாம் நியாப்படுத்த வில்லை) போன்ற நல்ல தலைவர்களை உள்ளடக்கியதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம், ஆனால் அப்பேர் பெற்ற தலைவர்களை கொண்ட இன்றைய கம்யூனிஸ்ட்கள் அப்படி உள்ளனரா என்பது கேள்விகுறிதான், அதாவது அத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தனி மனித ஒழுங்கிற்க்கு, வாழ்க்கைக்கு உதவுகிறதா என்பதுதான் கேள்வி?
  








Thursday, December 9, 2010

We Ate Poison

          15 வருடங்களுக்கு முன்னால் Outlook பத்திரிக்கையில் ஒரு அட்டை பட கட்டுரை.    தலைப்பு இதுதான் “ நாம் விஷத்தை உண்கிறோம்” என்று.    அப்பொழுது அதிக ஆங்கில அறிவு இல்லாததனால் அக்கட்டுரையின் முழுக் கருத்தை அறிய முடியவில்லை.

           ஆனால் கருத்து இதுதான் நாம் சாப்பிடும் உணவு அனைத்திலும் நச்சுப்பொருட்கள் உள்ளன என்று.     அப்பத்திரிக்கையின் அட்டைபடத்தையே அழகாக சித்தரித்திருப்பர். காய்கறிகள்,மீன் மற்றும் உணவு வகைகள் அனைத்தையும் மண்டை ஓட்டு வடிவில் அமைத்திருப்பர்.  பார்க்கவே பயமாக இருக்கும்.

இப்பொழுதும் பயம்தான் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலையில்.

ஆனால் இப்பொழுது விவாதிக்க வேண்டியதே வேறு விடயம்.  ஆம்.    எப்படி நாம் உண்ணும் உணவில் விஷம் உள்ளது என்று.    

 நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.

         ஏதேச்சையாக நான் சேர்ந்ததோ இளங்கலை சுற்றுப்புற அறிவியல் பாடத்தில்  போதாதா பின்னே இவ்வுலகில் நிகழும், நிகழ்ந்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புற மாசுபடுதல் என்ன என்ன, எப்படி, எங்கே, யாரால் போன்ற பாடங்கள் பல..

அதில் ஒன்றுதான் Outlook பத்திரிக்கை சுட்டிக்காட்டிய உண்ணும் உணவில் விஷம்.       

நாம் வயல்களில் தெளிக்கும் பூச்சி மருந்துகளில் ஆரம்பிக்கின்றது விஷமம்.
ஆம்.  அப்பூச்சி மருந்துகள் இல்லாமல் நாம் நல்ல அருவடையை பார்க்க முடியாது, விளைச்சல் இருக்காது... அவ்வளவு ஏன் பொதிகை தொலைக்காட்சியிலேயே விளம்பரப்படுத்தப்படுகிறது இன்ன மருந்துகளை இன்ன காலங்களில் தெளிக்க வேண்டும் என்று.

சரி, அப்பூச்சு மருந்துகளை அத்தாவரமும் தன்னுள் எடுத்துக் கொள்கிறது, அவற்றை உண்ணும் கால்நடைகளின் கொழுப்பு 20% அந்த விஷத்தை சேமித்துக்கொள்கிறது, மீதியை அவ்விலங்கின் சிறு நீரகங்கள் வெளியேற்றி விடுகிறது. கால்நடைகள் தரும் பாலிலும் உள்ளது  அந்த பூச்சுக்கொல்லிகள்.

விளைய வைத்த அந்த தானியத்தையோ அல்லது அந்த கால்நடையையோ அல்லது பாலையோ அம்மனிதன் உண்ணும் போது அவ்வளவும் அம்மனிதனுள் இறங்குகிறது   ஆனால் கடவுளின் அற்புதங்களில் ஒன்றான நமது சுத்திகரிப்பு இயந்திரங்களான   சிறுநீரகங்கள் வெளியேற்றி விடுகின்றன,

இப்படி ஏதாவது ஒரு நாள் நிகழ்ந்தால் பரவாயில்லை அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இது இருந்ததென்றால்,   ஆம்.. நாம் அன்றாடம் உண்ணும் அனைத்து உணவிலும் உள்ளது இந்த Pesticides என்ற இந்த பூச்சிக்கொல்லிகள். அதனால் நமது சிறு நீரகங்களும் தொடர்ந்து பாடுபட்டு இதனை வெளியேற்றுகிறது.......ஆனால் ஒருநாள்.............அந்த சிறுநீரகங்களும் நின்று விடும். அவ்வளவுதான்....

மேலே உள்ளது எனக்கு தெரிந்த வகையில் நான் சுட்டிக்காண்பித்துள்ளேன். இதற்கு மேலும் இந்த சங்கிலித்தொடர் மிகப்பெரிதாகவும், பாதிப்புகள் பெரிதாகவும் இருக்கலாம்.


பூச்சிக்கொல்லிகளின் முழு விவரங்களும் அது மனிதன் உடம்பில் ஏற்படுத்தும் முழு பாதிப்புகளும் எனக்கு தெரியவரவில்லை. இதல்லாமல் இன்னும் என்னென வியாதிகளை மனிதனுக்கு ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. குழந்தைகளின் மூளைவளர்ச்சி, நம் உடலின் பாதிப்புகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தலாம்.

அதன் பாதிப்பினால்தான் புதுப்புது  நோய்கள், குறை பிரசவங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்னால் விமரிசையாக விற்கப்படும் குளிர் பானமொன்றில் இந்த பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக(!)(இந்தியாவில்) உள்ளன என்ற சர்ச்சைக் குள்ளானதை நாம் அறியலாம். 

சமீபத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தேனிலும் இக்கலப்பு உள்ளன என்பதை சமீபத்திய ஆய்வுகள் சொல்லியதை நாம் அறியலாம்.

ஆக இதுதான் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இதன் பாதிப்புகள் உள்ளன. என்ன செய்வது. தீர்வு ஒன்றுதான் அதாவது இயற்கை உரங்களை இடவேண்டியதுதான். ஆனால் விளைச்சல்... தெரியாது....ஏற்கனவே விவசாய நிலங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தினால் விளைநிலங்கள் PLOT போட்டு விற்க்கப்பட்டு வருகின்றன, இதில் நாம் இதை சொன்னால்..யார் கேட்பார்கள்.

எனக்கு தெரிந்து 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு கடை எங்கள் நகரத்தில் இயற்கை உரங்களால் தயாரிக்கப்பட்ட அரிசி மற்றும் சில தானியங்களை விற்று வந்தார். எனக்கு மகிழ்ச்சி அளித்தது அதை நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் சிபாரிசு செய்தேன். வெளிநாடு போய்விட்டு தற்போது வந்து பார்த்தால் கடையை காணோம், ஆமாம் யார் வாங்குவார்கள் 5 ரூபாய் விலை கூட சாதாரண அரிசியை விட ..

நாம் இயற்க்கை உரங்கள் இட்டு உண்ணலாம் என்றால் ஆறுகள், குளங்கள் நமது தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவப்பட்ட தொழிற்சாலைகளால் அல்லவா மாசடைகிறது அது கடலில் போய் முடிகிறது, அங்குள்ளதும் பாழாகிவிட்டது.. 

ஆக மனிதன் நிலம், நீர், கடல், காற்று என்று வரிசையாக வீணடித்துவிட்டான். வரும் சந்ததிகளை நினைத்தால் கவலைதான் தோன்றுகிறது. 

என்ன செய்ய என்னாலும் முழு சமுதாயத்தை மாற்றமுடியாதே, சமுதாய ஆர்வலர்கள், சுற்றுபுற ஆர்வலர்கள் கத்தினாலும் மற்ற மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை எங்கள் குரல்கள்., அல்லது நசுக்கப்படுகிறது.

ஏன் தான் சுற்றுப்புறத்தை பற்றி படித்தோம் என்றாகிவிட்டது, சுற்றுப்புறத்தையும் அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சொல்ல ஆரம்பித்தால் எதைச் சொல்ல, எதை விட...அவ்வளவு .

  உலகில் ஏற்படும் அதிக இறப்புகளுக்கு காரணம் அருந்தும் தண்ணீர் சுத்தமில்லாததே என்கிறது ஒரு ஆய்வு.

    எனக்கும் உணவு உண்ணும் முன் நினைவு வரும் என்ன செய்ய நானும் சாப்பிடத்தான் செய்கிறேன்.. ஏனெனில் எனக்கும் தகிக்கிறதே.......பசிக்கிறதே...................

நன்றி : Outlook